ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 15'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடைய உங்களுக்கு அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

நீங்கள் ஆங்கிலம் கற்கும் மாணவராக இருக்கலாம் அல்லது உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தொழில் புரிபவராக இருக்கலாம், அல்லது வேறு நாட்டில் வசிப்பவராக இருக்கலாம். நீங்கள் அன்றாடம் சந்திப்பவர்களுடன் ஏதோ ஒரு வகையில் ஆங்கிலத்தில் கதைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறு கதைக்கும் போது இந்த வாக்கியங்களை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.May I ask you something?
நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?

Leave me alone.
என்னை தனியாக இருக்க விடுங்கள்

I feel very lonely.
நான் மிகவும் தனிமையை உணர்கிறேன்.

I need a little help.
எனக்கு ஒரு சிறிய உதவி தேவைப்படுகிறது.

I very much like the idea.
அந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Could you explain to me?
உங்களால் எனக்கு விவரிக்க முடியுமா?

What do you think about it?
அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

I have seen that movie.
நான் அந்த திரைப்படத்தை பார்த்துள்ளேன்.

I appreciate your effort.
நான் உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.

Do you understand what I am saying?
நான் சொல்வது என்னவென்று உங்களுக்கு புரிகிறதா?
Previous Post Next Post