ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 48


ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். எந்தளவுக்கு ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்கிறோமோ, அந்தளவிற்கு உங்களால் ஆங்கிலத்தில் பேச முடிகிறது. 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்களுக்கு 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதி ஊடாக ஆங்கிலத்தில் கதைக்க உதவும் வாக்கியங்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம். இவற்றை சந்தற்பங்களுக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தலாம்.

அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

இவற்றில் சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை எனினும் அவற்றால் வெளிப்படும் கருத்து கீழே தரப்பட்டுள்ளவாறே அமையப்பெறும்.


I have fever.
எனக்கு காய்ச்சல் உள்ளது.

Do you have fever?
உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா?

I have dry cough.
எனக்கு வறட்டு இருமல் உள்ளது.

Do you have cough?
உங்களுக்கு இருமல் உள்ளதா?

I have headache.
எனக்கு தலைவலி உள்ளது.

I don't have headache.
எனக்கு தலைவலி இல்லை.

He has stomach ache.
அவனுக்கு வயிற்று வலி உள்ளது.

He doesn't have stomach ache.
அவனுக்கு வயிற்று வலி இல்லை.


She has hip pain.
அவளுக்கு இடுப்பு வலி உள்ளது.

She doesn't have hip pain.
அவளுக்கு இடுப்பு வலி இல்லை.

I have left leg pain.
எனக்கு இடது கால் வலி உள்ளது.

Are your legs painful?
உங்கள் கால்கள் வலிக்கிறதா?

Do you bath daily?
நீங்கள் தினமும் குளிக்கிறீர்களா?

Do you bath at night?
நீங்கள் இரவில் குளிக்கிறீர்களா?

Don't bath at night.
இரவில் குளிக்க வேண்டாம்.
Previous Post Next Post