ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 50


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் மற்றும் சொற்றொடர்கள் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He is afraid of the dark.
அவன் இருளுக்கு பயப்படுகிறான்.
Is he afraid of the dark?
அவன் இருளுக்கு பயப்படுகிறானா?
He is not afraid of the dark
அவன் இருளுக்கு பயப்படுவதில்லை.
Isn't he afraid of the dark?
அவன் இருளுக்கு பயப்படுவதில்லையா?

You are alone.
நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்.
Are you alone?
நீங்கள் தனியாக இருக்கிறீர்களா?
You are not alone.
நீங்கள் தனியாக இல்லை.
Aren't you alone?
நீங்கள் தனியாக இல்லையா?

They were arrested.
அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Were they arrested?
அவர்கள் கைது செய்யப்பட்டனரா?
They were not arrested.
அவர்கள் கைது செய்யப்படவில்லை.
Weren't they arrested?
அவர்கள் கைது செய்யப்படவில்லையா?


You can arrange the room.
உங்களால் அறையை ஒழுங்குசெய்ய முடியும்.
Can you arrange the room?
உங்களால் அறையை ஒழுங்குசெய்ய முடியுமா?
You can't arrange the room.
உங்களால் அறையை ஒழுங்குசெய்ய முடியாது.
Can't you arrange the room?
உங்களால் அறையை ஒழுங்குசெய்ய முடியாதா?

Gather around me.
என்னைச் சுற்றி ஒன்றுசேருங்கள்.
Don't argue with me.
என்னுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
I already knew it.
எனக்கு ஏற்கனவே அது தெரியும்.
Don't abuse your privileges.
உங்கள் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்.
أحدث أقدم