ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 54


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.

இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் மற்றும் ஆங்கில சொற்றொடர்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


That has to happen.
அது நடக்க வேண்டியுள்ளது.
Does that have to happen?
அது நடக்க வேண்டியுள்ளதா?
That doesn't have to happen.
அது நடக்க வேண்டியில்லை.
Doesn't that have to happen?
அது நடக்க வேண்டியில்லையா?

You slept well.
நீங்கள் நன்றாக உறங்கினீர்கள்.
Did you sleep well?
நீங்கள் நன்றாக உறங்கினீர்களா?
You didn't sleep well.
நீங்கள் நன்றாக உறங்கவில்லை.
Didn't you sleep well?
நீங்கள் நன்றாக உறங்கவில்லையா?

You have to stop this.
இதை நீங்கள் நிறுத்த வேண்டியுள்ளது.
Do you have to stop this?
இதை நீங்கள் நிறுத்த வேண்டியுள்ளதா?
You don't have to stop this.
இதை நீங்கள் நிறுத்த வேண்டியதில்லை.
Don't you have to stop this?
இதை நீங்கள் நிறுத்த வேண்டியதில்லையா?


You can take me anywhere.
உங்களால் என்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம்.
Can you take me somewhere?
உங்களால் என்னை எங்காவது அழைத்து செல்ல முடியுமா?
You can't take me anywhere.
உங்களால் என்னை எங்கும் அழைத்து செல்ல முடியாது.
Can't you take me somewhere?
உங்களால் என்னை எங்காவது அழைத்து செல்ல முடியாதா?

She knows everything.
அவளுக்கு எல்லாம் தெரியும்.
Does she know anything?
அவளுக்கு ஏதாவது தெரியுமா?
She doesn't know anything.
அவளுக்கு எதுவும் தெரியாது.
Doesn't she know anything?
அவளுக்கு எதுவும் தெரியாதா?
أحدث أقدم