ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 55


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

சிலர் ஆங்கிலத்தில் பேச ஆர்வம் இருந்தும், ஆங்கிலம் பேசும்போது எதாவது தவறு ஏற்படும் எனும் பயத்தில், ஆங்கிலம் பேசுவதற்கு தயக்கம் காட்டுவார்கள். நீங்கள் இந்த தயக்கத்தை விட்டுவிட வேண்டும். 

முதலில் ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே என்பதை நீங்கள்  புரிந்துகொள்ள வேண்டும். மேலும் நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இரண்டாம் மொழியினை நீங்கள் எவ்வாறு இலகுவாக கற்று கதைக்கிறீர்களோ, அதே போன்று ஆங்கிலத்தையும் கற்று கதைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I will come before you leave.
நீங்கள் புறப்படுவதற்கு முன்னர் நான் வருவேன்.
Will you come before I leave?
நான் புறப்படுவதற்கு முன்னர் நீங்கள் வருவீர்களா?
You won’t come before I leave.
நான் புறப்படுவதற்கு முன்னர் நீங்கள் வரமாட்டீர்கள்.
Won’t you come before I leave?
நான் புறப்படுவதற்கு முன்னர் நீங்கள் வரமாட்டீர்களா?

They visit us rarely.
அவர்கள் எங்களை மிகவும் அரிதாகவே பார்க்க வருகிறார்கள்.
Do they visit you?
அவர்கள் உங்களைப் பார்க்க வருகிறார்களா? 
They don't visit us.
அவர்கள் எங்களை பார்க்க வருவதில்லை.
Don't they visit you?
அவர்கள் உங்களைப் பார்க்க வருவதில்லையா?

She will get it soon.
அவள் விரைவில் அதைப் பெற்றுக்கொள்வாள்.
Will she get it soon?
அவள் விரைவில் அதைப் பெற்றுக்கொள்வாளா?
She won’t get it soon.
அவள் விரைவில் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டாள்.
Won’t she get it soon?
அவள் விரைவில் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டாளா?

Don't break.
உடைக்க வேண்டாம்.
Don't complain.
முறையிட வேண்டாம்.
Don't copy.
பிரதிசெய்ய வேண்டாம்.
Don’t repeat it.
அதை மீண்டும் செய்ய வேண்டாம்.
Don't damage.
சேதமாக்க  வேண்டாம்.
أحدث أقدم