ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 56


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

சிலர் ஆங்கிலத்தில் பேசும்போது ஏதேனும் தவறு ஏற்படலாம் என்ற அச்சத்தில், ஆங்கிலத்தில் பேச தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், அவர்கள் வசிக்கும் நாட்டிலுள்ள இரண்டாம் மொழியாக வேறொரு மொழியை கதைக்கும் போது ஏற்படும் தவறுகளை பெரிதாகக் கொள்வதில்லை. பொதுவாக வெளிநாடுகளில் வசிப்பவர்களும் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளை பேசும் போது ஏற்படும் தவறுகள் பற்றி அக்கறை காட்டுவதில்லை. இதே போன்று ஆங்கிலம் என்பதும் ஒரு மொழி மட்டுமே என்பதை உங்கள் மனதில் நிறுத்தி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால், உங்களால் நிச்சயமாக ஆங்கிலத்தில் பேச முடியும். காலப்போக்கில் நீங்கள் விடும் தவறுகளையும் குறைத்துக்கொள்ளலாம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He can deny that.
அவனால் அதை மறுக்க முடியும்.
Can he deny that?
அவனால் அதை மறுக்க முடியுமா?
He can't deny that.
அவனால் அதை மறுக்க முடியாது.
Can't he deny that?
அவனால் அதை மறுக்க முடியாதா?
How can he deny that?
அவனால் எப்படி அதை மறுக்க முடியும்?

You are interested in this job.
உங்களுக்கு இந்த வேலையில் ஆர்வம் உள்ளது.
Are you interested in this job?
உங்களுக்கு இந்த வேலையில் ஆர்வம் உள்ளதா?
You not interested in this job.
உங்களுக்கு இந்த வேலையில் ஆர்வம் இல்லை.
Aren't interested in this job?
உங்களுக்கு இந்த வேலையில் ஆர்வம் இல்லையா?

I will call you later.
நான் உங்களை பின்னர் அழைக்கிறேன்.
Will you call me later?
நீங்கள் என்னை பின்னர் அழைப்பீர்களா?
I will not call you later.
நான் உங்களை பின்னர் அழைக்க மாட்டேன்.
Won't you call me later?
நீங்கள் என்னை பின்னர் அழைக்க மாட்டீர்களா?


We shall do that another day.
நாம் அதை இன்னொரு நாள் செய்வோம்.
Shall we do that another day?
நாம் அதை இன்னொரு நாள் செய்வோமா?

This is enough.
இது போதும்.
Is this enough?
இது போதுமா?
This is not enough.
இது போதாது.
Isn't this enough?
இது போதாதா?

She is inside the house.
அவள் வீட்டினுள் இருக்கிறாள்.
Is she inside the house?
அவள் வீட்டினுள் இருக்கிறாளா?
She is not inside the house.
அவள் வீட்டினுள் இல்லை.
Isn't she inside the house?
அவள் வீட்டினுள் இல்லையா?
Previous Post Next Post