ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 58


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுக்க வேண்டும். இதற்காக தினமும் சில நிமிடங்களை அல்லது கிழமையில் சில மணி நேரங்களை ஒதுக்கி நீங்கள் பேசுவதற்கு பயிற்சி எடுக்கலாம். இதற்காக நீங்கள் இங்கே தரப்படும் ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


You have to be very careful.
நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Do I have to be very careful?
நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமா?
You don't have to be careful.
நீங்கள் கவனமாக இருக்க வேண்டியதில்லை.
Don't you have to be very careful?
நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமல்லவா?

She cooks almost every day.
அவள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சமைக்கிறாள்.
Does she cook every day?
அவள் ஒவ்வொரு நாளும் சமைக்கிறாளா?
She doesn't cook every day.
அவள் ஒவ்வொரு நாளும் சமைப்பதில்லை.
Doesn't she cook every day?
அவள் ஒவ்வொரு நாளும் சமைப்பதில்லையா?

(இங்கே சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து Every day என்பதை தினமும் என்றும் கூற முடியும். அதேபோல் இங்கே Every day என்பதற்கு பதிலாக Daily - தினமும் என்பதையும் உங்களால் பயன்படுத்த முடியும்).

My office is very far away.
எனது அலுவலகம் வெகு தொலைவில் உள்ளது.
Is your office very far away?
உங்கள் அலுவலகம் வெகு தொலைவில் உள்ளதா?
My office is not very far away.
எனது அலுவலகம் வெகு தொலைவில் இல்லை.
Isn't your office very far away?
உங்கள் அலுவலகம் வெகு தொலைவில் இல்லையா?


Where was he playing?
அவன் எங்கே விளையாடிக் கொண்டிருந்தான்?
He was playing outside.
அவன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.
Was he playing outside?
அவன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தானா?
He was not playing outside.
அவன் வெளியே விளையாடிக் கொண்டிருக்கவில்லை.
Wasn't he playing outside?
அவன் வெளியே விளையாடிக் கொண்டிருக்கவில்லையா?

You expect something.
நீங்கள் எதையோ எதிர்பார்க்கிறீர்கள்.
Do you expect anything?
நீங்கள் எதையாவது எதிர்பார்க்கிறீர்களா?
I don't expect anything.
நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
Don't you expect anything?
நீங்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லையா?

That shop is nearby.
அந்த கடை அருகாமையில் உள்ளது.
Is that shop nearby?
அந்த கடை அருகாமையில் உள்ளதா?
That shop is not nearby.
அந்த கடை அருகாமையில் இல்லை.
Isn't that shop nearby?
அந்த கடை அருகாமையில் இல்லையா?
Previous Post Next Post