ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


You can remove it.
உங்களால் அதை அகற்ற முடியும்.
Can you remove it?
உங்களால் அதை அகற்ற முடியுமா?
You can't remove it.
உங்களால் அதை அகற்ற முடியாது.
Can't you remove it?
உங்களால் அதை அகற்ற முடியாதா?

I like your approach.
உங்கள் அணுகுமுறை எனக்கு பிடித்திருக்கிறது.
Do you like my approach?
உங்களுக்கு எனது அணுகுமுறை பிடித்திருக்கிறதா?
I don't like your approach.
உங்கள் அணுகுமுறையை நான் விரும்புவதில்லை.
Don't you like my approach?
எனது அணுகுமுறை நீங்கள் விரும்புவதில்லையா?

She will assist you.
அவள் உங்களுக்கு உதவி செய்வாள்.
Will she assist me?
அவள் எனக்கு உதவி செய்வாளா?
She won't assist you.
அவள் உங்களுக்கு உதவ மாட்டாள்.
Won't she assist me?
அவள் எனக்கு உதவ மாட்டாளா?


You should participate.
நீங்கள் பங்குபற்ற வேண்டும்.
Should we participate?
நாங்கள் பங்குபற்ற வேண்டுமா?
You should not participate.
நீங்கள் பங்குபற்றக் கூடாது.
Shouldn't we participate?
நாங்கள் பங்குபற்றக்கூடாதா?

He made a mistake.
அவன் ஒரு தவறு செய்துவிட்டான்.
Did he make any mistake?
அவன் ஏதாவது தவறு செய்தானா?
He didn't make any mistake.
அவன் எந்தத் தவறும் செய்யவில்லை.
Didn't he make any mistake?
அவன் எந்தத் தவறும் செய்யவில்லையா?
Previous Post Next Post