ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 67


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.

இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


You are alone here.
நீங்கள் இங்கே தனியாக இருக்கிறீர்கள்.

Are you alone here?
நீங்கள் இங்கே தனியாக இருக்கிறீர்களா?

You are not alone here.
நீங்கள் இங்கே தனியாக இல்லை.

Aren't you alone here?
நீங்கள் இங்கே தனியாக இல்லையா?

Where is your friend?
உங்கள் நண்பர் எங்கே?

We lost each other.
நாங்கள் ஒருவரை ஒருவர் தொலைத்துவிட்டோம்.

Where is he?
அவன் எங்கே?

He is at home.
அவன் வீட்டில் இருக்கிறான்.

Where is she?
அவள் எங்கே?

She is at work.
அவள் வேலையில் இருக்கிறாள்.

Where are you?
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

I am with my friends.
நான் எனது நண்பர்களுடன் இருக்கிறேன்.


Where are they?
அவர்கள் எங்கே?

They left about an hour ago.
அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு கிளம்பிவிட்டனர்.

Let's work together.
நாம் ஒன்றாக வேலை செய்வோம்.

You should try that.
நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும்.

Did you try that?
நீங்கள் அதை முயற்சித்தீர்களா?

Why don't you try that?
நீங்கள் ஏன் அதை முயற்சி செய்வதில்லை?

What happened to you?
உங்களுக்கு என்ன நடந்தது?

Stay there.
அங்கேயே இருங்கள்.

What are you doing?
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

There is another way.
வேறு வழி இருக்கிறது.

There is no other way.
வேறு வழியில்லை.
أحدث أقدم