ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 68


ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்களுக்கு 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதி ஊடாக ஆங்கிலத்தில் கதைக்க உதவும் வாக்கியங்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். எந்தளவுக்கு ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்கிறோமோ, அந்தளவிற்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது. 

அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தலாம்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழே தரப்பட்டுள்ளவாறே அமையப்பெறும்.


You can find it.
உங்களால் அதை கண்டுபிடிக்க முடியும்.

Can you find it?
உங்களால் அதை கண்டுபிடிக்க முடியுமா?

You can't find it.
உங்களால் அதை கண்டுபிடிக்க முடியாது.

Can't you find it?
உங்களால் அதை கண்டுபிடிக்க முடியாதா?

I found it.
நான் அதைக் கண்டுபிடித்தேன்.

I will find it.
நான் அதைக் கண்டுபிடிப்பேன்.

It fits you perfectly.
அது உங்களுக்கு சரியாக பொருந்துகிறது.

Does it fit you?
அது உங்களுக்கு பொருந்துகிறதா?

Does it fit me?
அது எனக்கு பொருந்துகிறதா?

It doesn't fit you.
அது உங்களுக்கு பொருந்துவதில்லை.

It doesn't fit me.
அது எனக்கு பொருந்துவதில்லை.

Doesn't it fit you?
அது உங்களுக்கு பொருந்துவதில்லையா?


This is an important book.
இது ஒரு முக்கியமான புத்தகம்.

Is this an important book?
இது ஒரு முக்கியமான புத்தகமா?

This is not an important book.
இது ஒரு முக்கியமான புத்தகம் அல்ல.

Isn't this an important book?
இது ஒரு முக்கியமான புத்தகம் அல்லவா?

I appreciate your effort.
உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

I don't like to disturb you.
நான் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

Close your eyes.
உங்கள் கண்களை மூடுங்கள்.

Don't close your eyes.
உங்கள் கண்களை மூட வேண்டாம்.

Open your eyes.
உங்கள் கண்களை திறவுங்கள்.

Don't open your eyes.
உங்கள் கண்களை திறக்க வேண்டாம்.

Show me your hands.
உங்கள் கைகளை எனக்குக் காட்டுங்கள்.
Previous Post Next Post