ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 18)


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் பயிற்சிகளாக தரப்பட்டுள்ளன.  இவற்றின் விடைகளும் கீழே தரப்பட்டுள்ளன. இவ்வாறான வாக்கியங்களின் கட்டமைப்பை இலகுவாக விளங்கிக்கொள்வதற்கான ஆங்கில இலக்கண பாடங்களும் விரைவில் பதிவிடப்படும்.

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.


அவன் அங்கே இருக்கிறான்.
He is there.

அவன் அங்கே இருந்தான்.
He was there.

அவன் அங்கே இருப்பான்.
He will be there.

அவள் இங்கே வேலை செய்கிறாள்.
She works here.

அவள் இங்கே வேலை செய்தாள்.
She worked here.

அவள் இங்கே வேலை செய்வாள்.
She will work here.

அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
They are going.

அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
They were going.


அவர்கள் போய்க் கொண்டிருப்பார்கள்.
They will be going.

நீங்கள் உள்ளே வர முடியும்.
You can come in.

நீங்கள் உள்ளே வரலாம்.
You may come in.

நீங்கள் உள்ளே வர வேண்டும்.
You should come in.

நீங்கள் கட்டாயம் உள்ளே வர வேண்டும்.
You must come in.

நீங்கள் அங்கு செல்கிறீர்களா?
Do you go there?

நீங்கள் அங்கு சென்றீர்களா?
Did you go there?

நீங்கள் அங்கு செல்வீர்களா?
Will you go there?
Previous Post Next Post