ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 71


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


You have to tell that.
அதை நீங்கள் சொல்ல வேண்டி உள்ளது.

Do I have to tell that?
நான் அதை சொல்ல வேண்டி உள்ளதா?

You don't have to tell that.
அதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.

Don't you have to tell that?
அதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லையா?

Why do I have to tell that?
ஏன் நான் அதை சொல்ல வேண்டி உள்ளது.

What are you going to do now?
நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

I am not going to do anything.
நான் எதுவும் செய்யப் போவதில்லை.

What should I do now?
நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

Do you have any idea?
உங்களிடம் ஏதாவது யோசனை உள்ளதா?

I don't have any idea.
என்னிடம் எந்த யோசனையும் இல்லை.

She prepared food.
அவள் உணவு தயார் செய்தாள்.

Did she prepare food?
அவள் உணவு தயார் செய்தாளா?

She didn't prepare food.
அவள் உணவு தயார் செய்யவில்லை.

Didn't she prepare food?
அவள் உணவு தயார் செய்யவில்லையா?


When did she prepare food?
அவள் எப்போது  உணவு தயார் செய்தாள்?

Why didn't she prepare food?
அவள் ஏன் உணவு தயார் செய்யவில்லை?

We should protect them.
நாம் அவர்களை பாதுகாக்க வேண்டும்.

Should we protect them?
நாம் அவர்களை பாதுகாக்க வேண்டுமா?

We shouldn't protect them.
நாம் அவர்களை பாதுகாக்கக் கூடாது.

Shouldn't we protect them?
நாம் அவர்களை பாதுகாக்கக் கூடாதா?

Why should we protect them?
நாம் ஏன் அவர்களை பாதுகாக்க வேண்டும்?

I can hear your voice.
என்னால் உங்கள் குரலை கேட்க முடிகிறது.

Can you hear my voice?
உங்களால் என் குரலை கேட்க முடிகிறதா?

I can't hear your voice.
என்னால் உங்கள் குரலை கேட்க முடிவதில்லை.

Can't you hear my voice?
உங்களால் என் குரலை கேட்க முடிவதில்லையா?

Why can't you hear my voice?
ஏன் உங்களால் என் குரலை கேட்க முடிவதில்லை?
Previous Post Next Post