ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 72


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


This is an organization.
இது ஒரு அமைப்பு.

Is this an organization?
இது ஒரு அமைப்பா?

This is not an organization.
இது ஒரு அமைப்பல்ல.

Isn't this an organization?
இது ஒரு அமைப்பல்லவா?

He was surrounded by people.
அவர் மக்களால் சூழப்பட்டார்.

Was he surrounded by people?
அவர் மக்களால் சூழப்பட்டாரா?

He was not surrounded by people.
அவர் மக்களால் சூழப்படவில்லை.

Wasn't he surrounded by people? 
அவர் மக்களால் சூழப்படவில்லையா?

Take action.
நடவடிக்கை எடுங்கள்.

Don't take any action.
எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்.

Did you take any action?
நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?

I didn't take any action.
நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Didn't you take any action?
நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?


Listen to them.
அவர்களுக்கு செவிமடுங்கள்.
(அவர்கள் சொல்வதை கேளுங்கள்)

I won't listen to them.
நான் அவர்கள் சொல்வதை கேட்க மாட்டேன்.

Why don't you listen to them?
நீங்கள் ஏன் அவர்கள் சொல்வதை கேட்பதில்லை?

I can't listen to them.
என்னால் அவர்கள் சொல்வதை கேட்க முடியாது.

Can't you listen to them?
உங்களால் அவர்கள் சொல்வதை கேட்க முடியாதா?

Things you have never heard before.
நீங்கள் இதற்கு முன்னர் கேள்விப்படாத விடயங்கள்.

Things you have never seen before.
நீங்கள் இதற்கு முன்னர் பார்த்திராத விடயங்கள்.

I am hopeless.
நான் நம்பிக்கை இழந்துள்ளேன்.
(நான் நம்பிக்கையற்று உள்ளேன்)

I am helpless.
நான் நிர்கதியாக (உதவியற்று) உள்ளேன்.

That is why I am here.
அதனால் தான் நான் இங்கே இருக்கிறேன்.
أحدث أقدم