ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 75


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


This is very interesting.
இது மிகவும் சுவாரஸ்யமானது.

Is this really interesting?
இது உண்மையில் சுவாரஸ்யமானதா?

This is not really interesting.
இது உண்மையில் சுவாரஸ்யமானதல்ல.

Isn't this really interesting?
இது உண்மையில் சுவாரஸ்யமானதல்லவா?

I went immediately.
நான் உடனடியாக சென்றேன்.

Did you go immediately?
நீங்கள் உடனடியாக சென்றீர்களா?

I didn't go immediately.
நான் உடனடியாக செல்லவில்லை.

Didn't you go immediately?
நீங்கள் உடனடியாக செல்லவில்லையா?

I still remember that.
எனக்கு அது இன்னும் நினைவிருக்கிறது.

Do you still remember that?
உங்களுக்கு அது இன்னும் நினைவிருக்கிறதா?

I don't remember that.
எனக்கு அது நினைவில்லை.

Don't you remember that?
உங்களுக்கு அது நினைவில்லையா?


You can trust me.
நீங்கள் என்னை நம்பலாம்.

Can you trust him?
உங்களால் அவனை நம்ப முடியுமா?

I can't trust him.
என்னால் அவனை நம்ப முடியாது.

Trust me.
என்னை நம்புங்கள்.

Don't trust him.
அவனை நம்ப வேண்டாம்.

Don't trust her.
அவளை நம்ப வேண்டாம்.

Don't trust them.
அவர்களை நம்ப வேண்டாம்.

What is your ambition?
உங்கள் இலட்சியம் என்ன?

I don't have any ambition.
எனக்கு எந்த இலட்சியமும் இல்லை.

Don't you have any ambition?
உங்களுக்கு எந்த இலட்சியமும் இல்லையா?

Why don't you have any ambition?
ஏன் உங்களுக்கு எந்த இலட்சியமும் இல்லை?

He came for you.
அவர் உங்களுக்காக வந்தார்.

Did he come for me?
அவர் எனக்காக வந்தாரா?

He didn't come for you.
அவர் உங்களுக்காக வரவில்லை.

Didn't he come for me?
அவர் எனக்காக வரவில்லையா?

Why did he come for me?
அவர் ஏன் எனக்காக வந்தார்?
أحدث أقدم