ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 76


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I like to talk about that.
நான் அதைப் பற்றி பேச விரும்புகிறேன்.

Do you like to talk about that?
நீங்கள் அதைப் பற்றி பேச விரும்புகிறீர்களா?

I don't like to talk about that.
நான் அதைப் பற்றி பேச விரும்புவதில்லை.

Don't you like to talk about that?
நீங்கள் அதைப் பற்றி பேச விரும்புவதில்லையா?

Why don't you like to talk about that?
ஏன் நீங்கள் அதைப் பற்றி பேச விரும்புவதில்லை?

I heard your voice.
நான் உங்கள் குரலைக் கேட்டேன்.

Did you hear my voice?
நீங்கள் என் குரலைக் கேட்டீர்களா?

I did not hear your voice.
நான் உங்கள் குரலை கேட்கவில்லை.

Didn't you hear my voice?
நீங்கள் என் குரலைக் கேட்கவில்லையா?

This is a serious issue.
இது ஒரு தீவிரமான பிரச்சினை.

Is this a serious issue?
இது ஒரு தீவிரமான பிரச்சினையா?

This is not a serious issue.
இது ஒரு தீவிரமான பிரச்சினையல்ல.

Isn't this a serious issue?
இது ஒரு தீவிரமான பிரச்சினையல்லவா?


Try to understand.
புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

You don't understand.
உங்களுக்கு புரிவதில்லை.

Don't you understand?
உங்களுக்கு புரிவதில்லையா?

Why don't you understand?
ஏன் உங்களுக்கு புரிவதில்லை?

You can't understand.
உங்களால் புரிந்துகொள்ள முடியாது.

Can't you understand?
உங்களால் புரிந்துகொள்ள முடியாதா?

Why can't you understand?
ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியாது?

He traveled alone.
அவன் தனியாக பயணித்தான்.

Did he travel alone?
அவன் தனியாக பயணித்தானா?

He did not travel alone.
அவன் தனியாக பயணிக்கவில்லை.

Didn't he travel alone?
அவன் தனியாக பயணிக்கவில்லையா?
Previous Post Next Post