அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 21 | English Words in Tamil


பொதுவாக ஒரு மொழியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மிக முக்கியமாக சொற்கள் (Words) தேவைப்படுகின்றன. ஆங்கிலத்திலும் அவ்வாறு தான். ஒரு மொழியின் அடிப்படை சொற்கள் என்றே கூறவேண்டும்.

ஆங்கிலத்தில் 100 சொற்கள் தெரிந்தவரை விட 1,000 சொற்கள் தெரிந்தவர் இன்னும் இலகுவாக மற்றும் விபரமாக உரையாட முடியும். இதனால் ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் முடியுமான வரை புதிய ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 5 தொடக்கம் 10 புதிய ஆங்கில சொற்களையேனும் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதற்காக நீங்கள் தினசரி ஆங்கில நாளிதழ்கள் மற்றும் ஆங்கில செய்தி இணையதளங்களை பார்வையிடுவதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். அவற்றில் நீங்கள் அறியாத புதிய ஆங்கில சொற்களை குறிப்பெடுத்து, ஆங்கில-தமிழ் அகராதி அல்லது இணையதளம் ஊடாக அவற்றின் தமிழ் கருத்தையும் அறிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

இங்கே அன்றாட வாழ்வில் பயன்படும் சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

 • Globe - உலகம்
 • Deliver - வழங்கு / விநியோகி
 • Across - குறுக்கே
 • Faithful - நன்றியுள்ள / நம்பிக்கைக்குரிய
 • Loyalty - விசுவாசம்
 • Profound - ஆழ்ந்த /ஆழமான
 • Distinguish - வேறுபடுத்து
 • Stunning - அதிர்ச்சியூட்டும் / வியப்பளிக்கும்
 • Spectacular - கண்கவர்
 • Magnificent - சிறப்புவாய்ந்த / மிக அழகான
 • Promise - வாக்குறுதி
 • Tremendous - பிரமாண்டமான
 • Vast - விசாலமான
 • Narrow - ஒடுங்கிய
 • Incredible - வியக்கத்தக்க
 • Tale - கதை
 • Miracle - அதிசயம்
 • Extraordinary - அசாதாரணமான
 • Diversity - பல்வகைமை
 • Extreme - தீவிர
 • Giant - இராட்சத
 • Decade - தசாப்தம்
 • Sort - வகை
 • Recent - அண்மைய
 • Century - நூற்றாண்டு
 • Millennium - ஆயிரம் ஆண்டு
 • Disappear - மறைந்து போகும்.
 • Achievement -  சாதனை
 • Poverty - வறுமை
 • Prosperous - வளமான
இது போன்ற மேலும் பல சொற்களை தொடர்ந்துவரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
Previous Post Next Post