ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 88


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். இது ஆங்கிலத்தில் பேசுவோம் எனும் தொடரின் 78 ஆவது பகுதியாகும்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்யும் அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது. ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Be with me.
என்னுடன் இருங்கள்.

Don't be with me.
என்னுடன் இருக்க வேண்டாம்.

Let him go.
அவனை போக விடுங்கள்.

Don't let him go.
அவனை போக விட வேண்டாம்.

People around you.
உங்களைச் சுற்றியுள்ள மக்கள்.

People with you.
உங்களுடன் உள்ள மக்கள்.

People against you.
உங்களுக்கு எதிரான மக்கள்.

We are happy about that.
நாங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம்.

Are you happy about that?
நீங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறீர்களா?

We are not happy about that.
நாங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைவதில்லை.

Aren't you happy about that?
நீங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைவதில்லையா?

I have something to share with you.
எனக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒன்று உள்ளது.

Do you have anything to share with me?
என்னுடன் பகிர்ந்து கொள்ள உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?

I don't have anything to share with you.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னிடம் எதுவும் இல்லை.

Don't you have anything to share with me?
என்னுடன் பகிர்ந்து கொள்ள உங்களிடம் எதுவும் இல்லையா?


You need to know your limits.
உங்கள் வரையறைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Do I need to know my limits?
எனது வரையறைகளை நான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

I don't need to know my limits.
எனது வரையறைகளை நான் தெரிந்து கொள்ளத் தேவையில்லை.

Don't you need to know your limits?
உங்கள் வரையறைகளை நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லையா?

He is older than me.
அவர் என்னை விட வயதானவர்.

Is he older than you?
அவர் உங்களை விட வயதானவரா?

He is not older than me.
அவர் என்னை விட வயதானவரல்ல.

Isn't he older than you?
அவர் உங்களை விட வயதானவரல்லவா?

I want to be like him.
நான் அவரைப் போல இருக்க வேண்டும்.

Do you want to be like him?
நீங்கள் அவரைப் போல இருக்க வேண்டுமா?

I don't want to be like him.
நான் அவரைப் போல இருக்க வேண்டியதில்லை.

Don't you want to be like him?
நீங்கள் அவரைப் போல இருக்க வேண்டாமா?
Previous Post Next Post