Let's speak English | ஆங்கிலத்தில் பேசுவோம் | பகுதி 87


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்களுக்கு உதவும் நோக்கில் இங்கே ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Therefore 
ஆகையால் / எனவே 

Because
ஏனெனில்

Because of that
அதன் காரணமாக

That is why
அதனால் தான்

First of all
முதலில்

Moreover
மேலும்

More than that
அதையும் விட

I will show you something.
நான் உங்களுக்கு ஒன்றை காண்பிப்பேன்.

Will you show me something?
நீங்கள் எனக்கு ஏதாவது ஒன்றைக் காண்பிப்பீர்களா?

I will not show you anything.
நான் உங்களுக்கு எதுவும் காண்பிக்க மாட்டேன்.

Won't you show me anything?
நீங்கள் எனக்கு எதையும் காண்பிக்க மாட்டீர்களா?

You should train yourself.
நீங்களே உங்களை பயிற்றுவிக்க வேண்டும்.

Should I train myself?
நானே என்னைப் பயிற்றுவிக்க வேண்டுமா?

You should not train yourself.
நீங்களே உங்களை பயிற்றுவிக்கக் கூடாது.

Shouldn't I train myself?
நானே என்னைப் பயிற்றுவிக்கக் கூடாதா?


We have enough time.
எங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறது.

Do we have enough time?
எங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறதா?

We don't have enough time.
எங்களுக்கு போதுமான நேரம் இல்லை.

Don't we have enough time?
எங்களுக்கு போதுமான நேரம் இல்லையா?

They will help us.
அவர்கள் எங்களுக்கு உதவி செய்வார்கள்.

Will they help us?
அவர்கள் எங்களுக்கு உதவி செய்வார்களா?

They won't help us.
அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்.

Won't they help us?
அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய மாட்டார்களா?

This is a very essential part.
இது மிகவும் அவசியமான ஒரு பகுதியாகும்.

Is this a very essential part?
இது மிகவும் அவசியமான ஒரு பகுதியா?

This is not a very essential part.
இது மிகவும் அவசியமான ஒரு பகுதியல்ல.

Isn't this a very essential part?
இது மிகவும் அவசியமான ஒரு பகுதியல்லவா?
Previous Post Next Post