ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 89


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். ஆங்கிலத்தில் பேச பயிற்சி செய்யும் நேரத்தின் அளவை பொருத்து, விரைவாக உங்களாலும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் மற்றும் சொற்றொடர்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன. இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Next few hours
அடுத்த சில மணிநேரம்

Next few days
அடுத்த சில நாட்கள்

Next few weeks
அடுத்த சில வாரங்கள்

Next few months.
அடுத்த சில மாதங்கள்

Next few years
அடுத்த சில ஆண்டுகள்

First thing
முதல் விடயம்

Last thing
கடைசி விடயம்

I will stay away.
நான் விலகி இருப்பேன்.

Will you stay away?
நீங்கள் விலகி இருப்பீர்களா?

I won't stay away.
நான் விலகி இருக்க மாட்டேன்.

Won't you stay away?
நீங்கள் விலகி இருக்க மாட்டீர்களா?

It reaches many people.
அது பலரை சென்றடைகிறது.

Does it reach many people?
அது பலரை சென்றடைகிறதா?

It doesn't reach many people.
அது பலரை சென்றடைவதில்லை.

Doesn't it reach many people?
அது பலரை சென்றடைவதில்லையா?


We should have our own vehicle.
எங்களிடம் எங்கள் சொந்த வாகனம் இருக்க வேண்டும்.

Should we have our own vehicle?
எங்களிடம் எங்கள் சொந்த வாகனம் இருக்க வேண்டுமா?

We should not have our own vehicle.
எங்களிடம் எங்கள் சொந்த வாகனம் இருக்கக் கூடாது.

Shouldn't we have our own vehicle?
எங்களிடம் எங்கள் சொந்த வாகனம் இருக்கக் கூடாதா?

It was a dream for me.
எனக்கு அது ஒரு கனவாக இருந்தது.

Was it a dream for you?
உங்களுக்கு அது ஒரு கனவாக இருந்ததா?

It was not a dream for me.
எனக்கு அது ஒரு கனவாக இருக்கவில்லை.

Wasn't it a dream for you?
உங்களுக்கு அது ஒரு கனவாக இருக்கவில்லையா?

They produce food.
அவர்கள் உணவு உற்பத்தி செய்கிறார்கள்.

Do they produce food?
அவர்கள் உணவு உற்பத்தி செய்கிறார்களா?

They don't produce food.
அவர்கள் உணவு உற்பத்தி செய்வதில்லை.

Don't they produce food?
அவர்கள் உணவு உற்பத்தி செய்வதில்லையா?
أحدث أقدم