ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 90


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். எந்தளவுக்கு பயிச்சி செய்கிறோமோ, அந்தளவிற்கு உங்களால் ஆங்கிலத்தில் பேச முடிகிறது. 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


We got your letter.
உங்கள் கடிதம் எங்களுக்கு கிடைத்தது.

Did you get my letter?
எனது கடிதம் உங்களுக்கு கிடைத்ததா?

We did not get your letter.
உங்கள் கடிதம் எங்களுக்கு கிடைக்கவில்லை.

Didn't you get my letter?
எனது கடிதம் உங்களுக்கு கிடைக்கவில்லையா?

We have to agree with them.
நாங்கள் அவர்களுடன் உடன்பட வேண்டியுள்ளது.

Do we have to agree with them?
நாங்கள் அவர்களுடன் உடன்பட வேண்டியுள்ளதா?

We don't have to agree with them.
நாங்கள் அவர்களுடன் உடன்பட வேண்டியில்லை.

Don't we have to agree with them?
நாங்கள் அவர்களுடன் உடன்பட வேண்டியில்லையா?

She was forced to do that.
அவள் அதை செய்ய நிர்பந்திக்கப்பட்டாள்.

Was she forced to do that?
அவள் அதை செய்ய நிர்பந்திக்கப்பட்டாளா?

She was not forced to do that.
அவள் அதை செய்ய நிர்பந்திக்கப்படவில்லை.

Wasn't she forced to do that?
அவள் அதை செய்ய நிர்பந்திக்கப்படவில்லையா?

They compete with us.
அவர்கள் எங்களுடன் போட்டியிடுகிறார்கள்.

Do they compete with us?
அவர்கள் எங்களுடன் போட்டியிடுகிறார்களா?


They don't compete with us.
அவர்கள் எங்களுடன் போட்டியிடுவதில்லை.

Don't they compete with us?
அவர்கள் எங்களுடன் போட்டியிடுவதில்லையா?

There are various techniques to do this.
இதைச் செய்ய பல்வேறு நுட்பங்கள் உள்ளன.

Are there any techniques to do this?
இதைச் செய்ய ஏதாவது நுட்பங்கள் உள்ளனவா?

There are no techniques to do this.
இதைச் செய்வதற்கான நுட்பங்கள் எதுவும் இல்லை.

Aren't there any techniques to do this?
இதைச் செய்ய எந்த நுட்பங்களும் இல்லையா?

They project us in a wrong way.
அவர்கள் எங்களை தவறான வழியில் காட்டுகின்றனர்.

Do they project you in a wrong way?
அவர்கள் உங்களை தவறான வழியில் காட்டுகின்றனரா?

They don't project you in a wrong way.
அவர்கள் உங்களை தவறான வழியில் காட்டுவதில்லை.

Don't they project us in a wrong way? 
அவர்கள் எங்களை தவறான வழியில் காட்டுவதில்லையா?

We welcome good habits.
நாங்கள் நல்ல பழக்கங்களை வரவேற்கிறோம்.

Do you welcome good habits?
நீங்கள் நல்ல பழக்கங்களை வரவேற்கிறீர்களா?

We don't welcome bad habits.
நாங்கள் கெட்ட பழக்கங்களை வரவேற்பதில்லை.

Don't you welcome good habits?
நீங்கள் நல்ல பழக்கங்களை வரவேற்பதில்லையா?
Previous Post Next Post