அன்றாட வாழ்வில் புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 23 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஒரு மொழியை கற்பதற்கும், பேசுவதற்கும் அம்மொழியில் உள்ள சொற்களை தெரிந்துவைத்திருப்பதன் முக்கியத்துவம் பற்றி முன்னைய பகுதிகளில் பார்த்தோம்.

இங்கே அன்றாட வாழ்வில் பயன்படும் சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.


Scripture - வேதம் / மத நூல்
All the religions have their scriptures.
எல்லா மதங்களுக்கும் அவற்றின் மத நூல்கள் உள்ளன.

Ban - தடை செய்தல்
This game was banned in our country.
இந்த விளையாட்டு எமது நாட்டில் தடை செய்யப்பட்டது.

Compulsory - கட்டாய
Compulsory works.
கட்டாய வேலைகள்.

Option - விருப்பத்தேர்வு
I don't have that option.
எனக்கு அந்த விருப்பத்தேர்வு இல்லை.

Logic - தர்க்கம்
I don't get your logic.
உங்கள் தர்க்கம் எனக்கு புரிவதில்லை.

Strong - வலுவான / உறுதியான
You should be very strong person.
நீங்கள் மிகவும் வலுவானவராக இருக்க வேண்டும்.

Compare - ஒப்பிடுதல்
Don't compare yourself to others.
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்.

Spend - செலவு செய்தல்
Don't spend too much.
அளவுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டாம்.


Remaining - மீதமுள்ள
Who will do the remaining work?
மீதமுள்ள வேலையை யார் செய்வார்?

Philosophy - தத்துவம்
Philosophy of life.
வாழ்க்கைத் தத்துவம்.

Satisfaction - திருப்தி
I have no satisfied in this job.
இந்த வேலையில் எனக்கு திருப்தி இல்லை.

Universe - பிரபஞ்சம் 
Planets in the universe.
பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள்.

Disappointment - ஏமாற்றம்
I was disappointed.
நான் ஏமாற்றமடைந்தேன்.

Concern - அக்கறை
Please show some concern.
தயவுசெய்து கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

Objection - ஆட்சேபனை
He has no objection to your idea.
உங்கள் யோசனைக்கு அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
Previous Post Next Post