ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 95


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் போது பயன்படக்கூடிய சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் தினமும் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுக்க வேண்டும். அதற்காக இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Good idea
நல்ல யோசனை

Bad idea
மோசமான யோசனை

Best idea
சிறந்த யோசனை

Worst idea
மிக மோசமான யோசனை

Positive thinking
நேர்மறையான சிந்தனை

Negative thinking
எதிர்மறையான சிந்தனை

Wrong thinking
தவறான சிந்தனை

Proper thinking
சரியான சிந்தனை

He criticized us.
அவர் எங்களை விமர்சித்தார்.

Did he criticize us?
அவர் எங்களை விமர்சித்தாரா?

He didn't criticize us.
அவர் எங்களை விமர்சிக்கவில்லை.

Didn't he criticize us?
அவர் எங்களை விமர்சிக்கவில்லையா?

There are two types of people here.
இங்கே இரண்டு வகையான மக்கள் உள்ளனர்.

Are there two types of people here?
இங்கே இரண்டு வகையான மக்கள் உள்ளனரா?

There aren't two types of people here.
இங்கே இரண்டு வகையான மக்கள் இல்லை.

Aren't there two types of people here?
இங்கே இரண்டு வகையான மக்கள் இல்லையா?


You can do this better than him.
அவரை விட சிறப்பாக உங்களால் இதை செய்ய முடியும்.

Can you do this better than him?
அவரை விட சிறப்பாக உங்களால் இதை செய்ய முடியுமா?

You can't do this better than him.
அவரை விட சிறப்பாக உங்களால் இதை செய்ய முடியாது.

Can't you do this better than him?
அவரை விட சிறப்பாக உங்களால் இதை செய்ய முடியாதா?

They are ruthless.
அவர்கள் இரக்கமற்றவர்கள்.

Are they ruthless?
அவர்கள் இரக்கமற்றவர்களா?

They aren't ruthless.
அவர்கள் இரக்கமற்றவர்கள் அல்ல.

Aren't they ruthless?
அவர்கள் இரக்கமற்றவர்கள் அல்லவா?

I can feel the pain.
என்னால் வலியை உணர முடிகிறது.

Can you feel the pain?
உங்களால் வலியை உணர முடிகிறதா?

I can't feel the pain.
என்னால் வலியை உணர முடிவதில்லை.

Can't you feel the pain?
உங்களால் வலியை உணர முடிவதில்லையா?
Previous Post Next Post