ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 94


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Take it.
அதை எடுங்கள்.

Don't take it.
அதை எடுக்க வேண்டாம்.

Push it.
அதை தள்ளுங்கள்.

Don't push it.
அதை தள்ள வேண்டாம்.

Pull it.
அதை இழுங்கள்.

Don't pull it.
அதை இழுக்க வேண்டாம்.

Bring it here.
அதை இங்கே கொண்டு வாருங்கள்.

Don't bring it here.
அதை இங்கே கொண்டு வர வேண்டாம்.

He says many things.
அவர் பல விடயங்களை சொல்கிறார்.

Does he say anything?
அவர் ஏதாவது சொல்கிறாரா?

He doesn't say anything.
அவர் எதுவும் சொல்வதில்லை.

Doesn't he say anything?
அவர் எதுவும் சொல்வதில்லையா?

It is a misconception.
அது ஒரு தவறான கருத்து.

Is it a misconception? 
அது ஒரு தவறான கருத்தா?

It is not a misconception.
அது ஒரு தவறான கருத்தல்ல.

Isn't it a misconception?
அது ஒரு தவறான கருத்தல்லவா?


You rejected us.
நீங்கள் எங்களை நிராகரித்தீர்கள்.

Did we reject you?.
நாங்கள் உங்களை நிராகரித்தோமா?

We didn't reject you.
நாங்கள் உங்களை நிராகரிக்கவில்லை.

Didn't you reject us?
நீங்கள் எங்களை நிராகரிக்கவில்லையா?

That is harmful to your body.
அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

Is that harmful to our body?
அது எங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதா?

That is not harmful to your body.
அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதல்ல.

Isn't that harmful to our body?
அது எங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதல்லவா?

She should know about them.
அவள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

Should she know about them?
அவள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

She should not know about them.
அவள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது.

Shouldn't she know about them?
அவள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாதா?
Previous Post Next Post