ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 112


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ள. இவற்றை நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Less than that
அதை விட குறைவாக

Greater than that
அதை விட அதிகமாக

Bigger than that
அதை விட பெரிய

Smaller than that
அதை விட சிறிய

Better than that
அதை விட சிறந்த

Taller than that
அதை விட உயரமான

This is the final warning.
இதுவே இறுதி எச்சரிக்கை.

Is this the final warning?
இது இறுதி எச்சரிக்கையா?

This is not the final warning.
இது இறுதி எச்சரிக்கையல்ல.

Isn't this the final warning?
இது இறுதி எச்சரிக்கையல்லவா?

I asked that.
நான் அதைக் கேட்டேன்.

Did you ask that?
நீங்கள் அதைக் கேட்டீர்களா?

When did you ask that?
நீங்கள் அதை எப்போது கேட்டீர்கள்?

I didn't ask that.
நான் அதைக் கேட்கவில்லை.

Didn't you ask that?
நீங்கள் அதைக் கேட்கவில்லையா?

Why didn't you ask that?
ஏன் நீங்கள் அதைக் கேட்கவில்லை?


They were threatened.
அவர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

Were they threatened?
அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களா?

They were not threatened.
அவர்கள் அச்சுறுத்தப்படவில்லை.

Weren't they threatened?
அவர்கள் அச்சுறுத்தப்படவில்லையா?

She reached home.
அவள் வீட்டை அடைந்தாள்.

Did she reach home?
அவள் வீட்டை அடைந்தாளா?

She didn't reach home.
அவள் வீட்டை அடையவில்லை.

Didn't she reach home?
அவள் வீட்டை அடையவில்லையா?

We should stop this.
நாங்கள் இதை நிறுத்த வேண்டும்.

Should we stop this?
நாங்கள் இதை நிறுத்த வேண்டுமா?

We shouldn't stop this.
நாங்கள் இதை நிறுத்தக்கூடாது.

Shouldn't we stop this?
நாங்கள் இதை நிறுத்தக்கூடாதா?
Previous Post Next Post