ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 114


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ள. இவற்றை நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Chest pain
நெஞ்சு வலி

Back pain
முதுகு வலி

Leg pain
கால் வலி

Knee pain
முழங்கால் வலி

Neck pain
கழுத்து வலி

Stomachache
வயிற்று வலி

Headache
தலைவலி

Toothache
பல் வலி

Heart disease
இருதய நோய்

Kidney disease
சிறுநீரக நோய்

Diabetes
நீரிழிவு நோய்

மனித உடல் மற்றும் நோய்களுடன் தொடர்புடைய சொற்களை தனியே வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.

We know that she is still there.
அவள் இன்னும் அங்கே இருக்கிறாள் என்று எங்களுக்குத் தெரியும்.

Do you know that she is still there?
அவள் இன்னும் அங்கே இருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரியுமா?

We don't know that she is still there.
அவள் இன்னும் அங்கே இருக்கிறாள் என்று எங்களுக்குத் தெரியாது.

Don't you know that she is still there?
அவள் இன்னும் அங்கே இருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரியாதா?

He likes people like you.
அவர் உங்களைப் போன்றவர்களை விரும்புகிறார்.

Does he like people like me?
அவர் என்னைப் போன்றவர்களை விரும்புகிறாரா?

He doesn't like people like you.
அவர் உங்களைப் போன்றவர்களை விரும்புவதில்லை.

Doesn't he like people like me?
அவர் என்னைப் போன்றவர்களை விரும்புவதில்லையா?


They are stronger than you think.
நீங்கள் நினைப்பதை விட அவர்கள் வலிமையானவர்கள்.

Are they stronger than we think?
நங்கள் நினைப்பதை விட அவர்கள் வலிமையானவர்களா?

They are not stronger than you think.
நீங்கள் நினைப்பதை விட அவர்கள் வலிமையானவர்கள் அல்ல.

Aren't they stronger than we think?
நாங்கள் நினைப்பதை விட அவர்கள் வலிமையானவர்கள் அல்லவா?

Elephants destroyed our crops.
யானைகள் எங்கள் பயிர்களை அழித்தன.

Did the elephant destroy your crops?
யானைகள் உங்கள் பயிர்களை அழித்தனவா?

Elephants didn't destroy our crops.
யானைகள் எங்கள் பயிர்களை அழிக்கவில்லை.

Didn't the elephants destroy your crops?
யானைகள் உங்கள் பயிர்களை அழிக்கவில்லையா?

You can cross the border.
உங்களால் எல்லையைக் கடக்க முடியும்.

Can you cross the border?
உங்களால் எல்லையைக் கடக்க முடியுமா?

You can't cross the border.
உங்களால் எல்லையைக் கடக்க முடியாது.

Can't you cross the border?
உங்களால் எல்லையைக் கடக்க முடியாதா?

Why can't you cross the border?
ஏன் உங்களால் எல்லையைக் கடக்க முடியாது?
أحدث أقدم