ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 115


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ள. இவற்றை நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Somehow
எப்படியோ

Anyhow
எப்படியும்

Ask him directly.
அவனிடம் நேரடியாகக் கேளுங்கள்.

Don't ask him directly.
அவனிடம் நேரடியாகக் கேட்க வேண்டாம்.

Once you come here
நீங்கள் இங்கே வந்தவுடன்

Once you leave that place
நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியதும்

Once you finish your work
உங்கள் வேலையை முடித்தவுடன்

Once you meet him
நீங்கள் அவரை சந்தித்தவுடன்

I can throw that away.
என்னால் அதைத் தூக்கி எறிய முடியும்.

Can you throw that away?
உங்களால் அதைத் தூக்கி எறிய முடியுமா?

I can't throw that away?
என்னால் அதைத் தூக்கி எறிய முடியாது?

Can't you throw that away?
உங்களால் அதை தூக்கி எறிய முடியாதா?

Why can't you throw that away?
ஏன் உங்களால் அதை தூக்கி எறிய முடியாது?


They have my phone number.
அவர்களிடம் எனது தொலைபேசி எண் உள்ளது.

Do they have your phone number?
அவர்களிடம் உங்கள் தொலைபேசி எண் உள்ளதா?

They don't have my phone number.
அவர்களிடம் எனது தொலைபேசி எண் இல்லை.

Don't they have your phone number?
அவர்களிடம் உங்கள் தொலைபேசி எண் இல்லையா?

He attempted to do that.
அவர் அதை செய்ய முயற்சித்தார்.

Did he attempt to do that?
அவர் அதை செய்ய முயற்சித்தாரா?

He didn't attempt to do that.
அவர் அதை செய்ய முயற்சிக்கவில்லை.

Didn't he attempt to do that?
அவர் அதை செய்ய முயற்சிக்கவில்லையா?

She should come tomorrow.
அவள் நாளை வர வேண்டும்.

Should she come tomorrow?
அவள் நாளை வர வேண்டுமா?

She should not come today.
அவள் இன்று வரக்கூடாது.

Shouldn't she come today?
அவள் இன்று வரக்கூடாதா?
Previous Post Next Post