ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Thanks for coming.
வருகை தந்தமைக்கு நன்றி.

Thanks for asking.
கேட்டதற்கு நன்றி.

Thanks for replying.
பதிலளித்தமைக்கு நன்றி.

Thanks for your support.
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

Thanks for your wishes.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

This is too much.
இது மிக அதிகம்.

Is this too much?
இது மிக அதிகமாக இருக்கிறதா?

This is not too much.
இது மிக அதிகமாக இல்லை.

Isn't this too much?
இது மிக அதிகமாக இல்லையா?

My friend is waiting for you.
எனது நண்பர் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

Is your friend waiting for me?
உங்கள் நண்பர் எனக்காக காத்துக்கொண்டிருக்கிறாரா?

My friend is not waiting for you.
எனது நண்பர் உங்களுக்காக காத்துக்கொண்டு இல்லை.

Isn't your friend waiting for me?
எனது நண்பர் உங்களுக்காக காத்துக்கொண்டு இல்லையா?


I thought that.
நான் அதை நினைத்தேன்.

Did you think that?
நீங்கள் அதை நினைத்தீர்களா?

I didn't think that.
நான் அதை நினைக்கவில்லை.

Didn't you think that?
நீங்கள் அதை நினைக்கவில்லையா?

We all know about that.
எங்கள் எல்லோருக்கும் அதைப் பற்றி தெரியும்.

Do you all know about that?
உங்கள் எல்லோருக்கும் அதைப் பற்றி தெரியுமா?

We all don't know about that.
எங்கள் எல்லோருக்கும் அதைப் பற்றி தெரியாது.

Don't you all know about that?
உங்கள் எல்லோருக்கும் அதைப் பற்றி தெரியாதா?

You have enough time to plan.
உங்களுக்கு திட்டமிட போதுமான நேரம் இருக்கிறது.

Do I have enough time to plan?
எனக்கு திட்டமிட போதுமான நேரம் இருக்கிறதா?

I don't have enough time to plan.
எனக்கு திட்டமிட போதுமான நேரம் இல்லை.

Don't you have enough time to plan?
உங்களுக்கு திட்டமிட போதுமான நேரம் இல்லையா?
Previous Post Next Post