ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 126


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Useful
பயனுள்ள

Useless
பயனற்ற

Very useful
மிகவும் பயனுள்ள

Careful
கவனமாக

Careless
கவனமின்மை

Very careful
மிகவும் கவனமாக

She has arrived.
அவள் வந்திருக்கிறாள்.

Has she arrived?
அவள் வந்திருக்கிறாளா?

She has not arrived.
அவள் வந்து இல்லை.

Hasn't she arrived?
அவள் வந்து இல்லையா?

You should use this.
இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

Should I use this?
இதை நான் பயன்படுத்த வேண்டுமா?

When should I use this?
இதை நான் எப்போது பயன்படுத்த வேண்டும்?

You should not use this.
இதை நீங்கள் பயன்படுத்தக்கூடாது.

Shouldn't you use this?
இதை நீங்கள் பயன்படுத்தக்கூடாதா?


He can argue.
அவரால் வாதிட முடியும்.

Can he argue?
அவரால் வாதிட முடியுமா?

He can't argue.
அவரால் வாதிட முடியாது.

Can't he argue?
அவரால் வாதிட முடியாதா?

They went to the hospital.
அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர்.

Did they go to the hospital?
அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றார்களா?

When did they go to the hospital?
அவர்கள் எப்போது மருத்துவமனைக்குச் சென்றார்கள்?

They didn't go to the hospital.
அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லவில்லை.

Didn't they go to the hospital?
அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லவில்லையா?

Why didn't they go to the hospital?
அவர்கள் ஏன் மருத்துவமனைக்குச் செல்லவில்லை?

It is a fair decision.
அது ஒரு நியாயமான முடிவு.

Is it a fair decision?
அது ஒரு நியாயமான முடிவா?

It is not a fair decision.
அது ஒரு நியாயமான முடிவல்ல.

Isn't it a fair decision?
அது ஒரு நியாயமான முடிவல்லவா?
أحدث أقدم