ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 127


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I made a written request.
நான் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தேன்.

Did you make a written request?
நீங்கள் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தீர்களா?

I didn't make a written request.
நான் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுக்கவில்லை.

Didn't you make a written request?
நீங்கள் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுக்கவில்லையா?

We can discuss.
எங்களால் கலந்துரையாட முடியும்.

Can we discuss?
எங்களால் கலந்துரையாட முடியுமா?

We can't discuss.
எங்களால் கலந்துரையாட முடியாது.

Can't we discuss?
எங்களால் கலந்துரையாட முடியாதா?

Why can't we discuss?
ஏன் எங்களால் கலந்துரையாட முடியாது?

They have gone to several areas.
அவர்கள் பல பகுதிகளுக்கு சென்றுள்ளார்கள்.

Have they gone to several areas?
அவர்கள் பல பகுதிகளுக்கு சென்றுள்ளார்களா?

They have not gone to several areas.
அவர்கள் பல பகுதிகளுக்கு சென்று இல்லை.

Haven't they gone to several areas?
அவர்கள் பல பகுதிகளுக்கு சென்று இல்லையா?


You have that right.
உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது.

Do you have that right?
உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா?

You don't have that right.
உங்களுக்கு அந்த உரிமை இல்லை.

Don't you have that right?
உங்களுக்கு அந்த உரிமை இல்லையா?

This is causing so many problems.
இது பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

Is this causing any problem?
இது ஏதேனும் பிரச்சினையை ஏற்படுத்துகிறதா?

This is not causing any problem.
இது எந்த பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை.

Isn't this causing any problem?
இது எந்த பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லையா?

We can escape from this place.
இந்த இடத்திலிருந்து எங்களால் தப்பிக்க முடியும்.

Can we escape from this place?
இந்த இடத்திலிருந்து எங்களால் தப்பிக்க முடியுமா?

How can we escape from this place?
இந்த இடத்திலிருந்து எங்களால் எவ்வாறு முடியும்?

We can't escape from this place.
இந்த இடத்திலிருந்து எங்களால் தப்பிக்க முடியாது.

Can't we escape from this place?
இந்த இடத்திலிருந்து எங்களால் தப்பிக்க முடியாதா?

Why can't we escape from this place?
ஏன் இந்த இடத்திலிருந்து எங்களால் தப்பிக்க முடியாது?
Previous Post Next Post