ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 129


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்கப் பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். ஆங்கிலம் கற்பதோடு, ஆங்கிலத்தில் கதைக்கவும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


We heard that sound.
எங்களுக்கு அந்த சத்தம் கேட்டது.

Did you hear that sound?
உங்களுக்கு அந்த சத்தம் கேட்டதா?

When did you hear that sound?
உங்களுக்கு எப்போது அந்த சத்தம் கேட்டது?

We didn't hear that sound.
எங்களுக்கு அந்த சத்தம் கேட்கவில்லை.

Didn't you hear that sound?
உங்களுக்கு அந்த சத்தம் கேட்கவில்லையா?

This happened last week.
இது சென்ற வாரம் நடந்தது.

Did this happen last week?
இது சென்ற வாரம் நடந்ததா?

When did this happen?
இது எப்போது நடந்தது?

This didn't happen last week.
இது சென்ற வாரம் நடக்கவில்லை.

Didn't this happen last week?
இது சென்ற வாரம் நடக்கவில்லையா?

We should talk about them.
நாம் அவர்களைப் பற்றி பேச வேண்டும்.

Should we talk about them?
நாம் அவர்களைப் பற்றி பேச வேண்டுமா?

We should not talk about them.
நாம் அவர்களைப் பற்றி பேசக்கூடாது.


Shouldn't we talk about them?
நாம் அவர்களைப் பற்றி பேசக்கூடாதா?

Why shouldn't we talk about them? 
ஏன் நாம் அவர்களைப் பற்றி பேசக்கூடாது?

He removed it.
அவர் அதை அகற்றினார்.

Did he remove it?
அவர் அதை அகற்றினாரா?

Why did he remove it?
ஏன் அவர் அதை அகற்றினார்?

He didn't remove it.
அவர் அதை அகற்றவில்லை.

Didn't he remove it?
அவர் அதை அகற்றவில்லையா?

They believe us.
அவர்கள் எங்களை நம்புகிறார்கள்.

Do they believe us?
அவர்கள் எங்களை நம்புகிறார்களா?

They don't believe us.
அவர்கள் எங்களை நம்புவதில்லை.

Don't they believe us?
அவர்கள் எங்களை நம்புவதில்லையா?

Why don't they believe us?
ஏன் அவர்கள் எங்களை நம்புவதில்லை?
أحدث أقدم