ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 134


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Who is the driver?
சாரதி யார்?

I am the driver.
நான் தான் சாரதி.

I am not the driver.
நான் சாரதியல்ல.

Are you the driver?
நீங்களா சாரதி?

Aren't you the driver?
நீங்களல்லவா சாரதி?

Where is the driver?
சாரதி எங்கே?

Bring that letter.
அந்த கடிதத்தை கொண்டு வாருங்கள்.

Don't bring that letter.
அந்த கடிதத்தை கொண்டு வர வேண்டாம்.

Did you bring that letter?
நீங்கள் அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்தீர்களா?

I didn't bring that letter.
நான் அந்த கடிதத்தை கொண்டு வரவில்லை.

Didn't you bring that letter?
நீங்கள் அந்த கடிதத்தை கொண்டு வரவில்லையா?

Why didn't you bring that letter?
நீங்கள் ஏன் அந்த கடிதத்தை கொண்டு வரவில்லை?

The president can issue an order.
ஜனாதிபதியால் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியும்.

Can the president issue an order?
ஜனாதிபதியால் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியுமா?

The president can't issue an order.
ஜனாதிபதியால் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது.

Can't the president issue an order?
ஜனாதிபதியால் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாதா?


He has retired.
அவர் ஓய்வுபெற்று இருக்கிறார்.

Has he retired?
அவர் ஓய்வுபெற்று இருக்கிறாரா?

He has not retired.
அவர் ஓய்வுபெற்று இல்லை.

Hasn't he retired?
அவர் ஓய்வுபெற்று இல்லையா?

I took him out.
நான் அவனை வெளியே அழைத்துச் சென்றேன்.

Did you take him out?
நீங்கள் அவனை வெளியே அழைத்துச் சென்றீர்களா?

When did you take him out?
நீங்கள் எப்போது அவரை வெளியே அழைத்துச் சென்றீர்கள்?

Don't take him out.
அவரை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம்.

You should take him out.
நீங்கள் அவரை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.

You shouldn't take him out.
நீங்கள் அவரை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.

I didn't take him out.
நான் அவரை வெளியே அழைத்துச் செல்லவில்லை.

Didn't you take him out?
நீங்கள் அவரை வெளியே அழைத்துச் செல்லவில்லையா?
أحدث أقدم