ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 145


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்படும் வாக்கியங்கள் நேர்மறை, கேள்வி, எதிர்மறை மற்றும் எதிர்மறை கேள்வி வாக்கியங்கள் என நீங்கள் அவற்றை உங்களுக்கு விரும்பிய வடிவில் பேசக்கூடியவாறு தரப்படுகின்றன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

That was a nice day.
அது ஒரு நல்ல நாளாக இருந்தது.

Was that a nice day?
அது ஒரு நல்ல நாளாக இருந்ததா?

That was not a nice day.
அது ஒரு நல்ல நாளாக இருக்கவில்லை.

Wasn't that a nice day?
அது ஒரு நல்ல நாளாக இருக்கவில்லையா?

They washed their hands.
அவர்கள் கைகளைக் கழுவினார்கள்.

Did they wash their hands?
அவர்கள் கைகளைக் கழுவினார்களா?

They didn't wash their hands.
அவர்கள் கைகளைக் கழுவவில்லை.

Didn't they wash their hands?
அவர்கள் கைகளைக் கழுவவில்லையா?

You learn your lessons.
நீங்கள் உங்கள் பாடங்களைக் கற்கிறீர்கள்.

Do you learn your lessons?
நீங்கள் உங்கள் பாடங்களைக் கற்கிறீர்களா?

You don't learn your lessons.
நீங்கள் உங்கள் பாடங்களைக் கற்பதில்லை.

Don't you learn your lessons?
நீங்கள் உங்கள் பாடங்களைக் கற்பதில்லையா?

These books are valuable.
இந்த புத்தகங்கள் மதிப்புமிக்கவை.

Are these books valuable?
இந்த புத்தகங்கள் மதிப்புமிக்கவையா?

These books are not valuable.
இந்த புத்தகங்கள் மதிப்புமிக்கவையல்ல.

Aren't these books valuable?
இந்த புத்தகங்கள் மதிப்புமிக்கவையல்லவா?

This happened when I was a baby.
நான் குழந்தையாக இருந்தபோது இது நடந்தது.

Did this happen when I was a baby?
நான் குழந்தையாக இருந்தபோது இது நடந்ததா?

This didn't happen when I was a baby.
நான் குழந்தையாக இருந்தபோது இது நடக்கவில்லை.

Didn't this happen when I was a baby?
நான் குழந்தையாக இருந்தபோது இது நடக்கவில்லையா?
أحدث أقدم