ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 150


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்படும் வாக்கியங்கள் நேர்மறை, கேள்வி, எதிர்மறை மற்றும் எதிர்மறை கேள்வி வாக்கியங்கள் என நீங்கள் அவற்றை உங்களுக்கு விரும்பிய வடிவில் பேசக்கூடியவாறு தரப்படுகின்றன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

Come again.
மீண்டும் வாருங்கள்.

Come soon.
சீக்கிரம் வாருங்கள்.

Come fast.
வேகமாக வாருங்கள்.

Come early.
நேரகாலத்துடன் வாருங்கள்.

Come today.
இன்று வாருங்கள்.

Come now.
இப்போது வாருங்கள்.

Come there.
அங்கு வாருங்கள்.


She has an issue.
அவளுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது.

Does she have any issues?
அவளுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருக்கின்றனவா?

She doesn't have any issues.
அவளுக்கு எந்த பிரச்சனைளும் இல்லை.

Doesn't she have any issues?
அவளுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லையா?

I watched the news last night.
நான் நேற்று இரவு செய்தி பார்த்தேன்.

Did you watch the news last night?
நீங்கள் நேற்று இரவு செய்தி பார்த்தீர்களா?

I didn't watch the news last night.
நான் நேற்று இரவு செய்தி பார்க்கவில்லை.

Didn't you watch the news last night?
நீங்கள் நேற்று இரவு செய்தி பார்க்கவில்லையா?

You can see that.
உங்களால் அதை பார்க்க முடியும்.

Can I see that?
என்னால் அதை பார்க்க முடியுமா?

You can't see that.
உங்களால் அதை பார்க்க முடியாது.

Can't you see that?
உங்களால் அதை பார்க்க முடியாதா?

I will look after you.
நான் உங்களைப் பார்த்துக் கொள்வேன்.

Will you look after me?
நீங்கள் என்னைப் பார்த்துக்கொள்வீர்களா?

I will not look after you.
நான் உங்களைப் பார்த்துக்கொள்ள மாட்டேன்.

Won't you look after me?
நீங்கள் என்னைப் பார்த்துக்கொள்ள மாட்டீர்களா?
He has three brothers.
அவருக்கு மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள்.

Does he have any brothers?
அவருக்கு சகோதரர்கள் யாராவது இருக்கிறார்களா?

He doesn't have any brothers.
அவருக்கு சகோதரர்கள் யாரும் இல்லை.

Doesn't he have any brothers?
அவருக்கு சகோதரர்கள் யாரும் இல்லையா?
He was at home.
அவர் வீட்டில் இருந்தார்.

Was he at home?
அவர் வீட்டில் இருந்தாரா?

He was not at home.
அவர் வீட்டில் இருக்கவில்லை.

Wasn't he at home?
அவர் வீட்டில் இருக்கவில்லையா?
أحدث أقدم