ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 152


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

That is an old vehicle.
அது ஒரு பழைய வாகனம்.

Is that an old vehicle?
அது ஒரு பழைய வாகனமா?

That is not an old vehicle.
அது ஒரு பழைய வாகனம் அல்ல.

Isn't that an old vehicle?
அது ஒரு பழைய வாகனம் அல்லவா?

She welcomed them cheerfully.
அவள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

We have never been to Singapore.
நாங்கள் ஒருபோதும் சிங்கப்பூர் சென்றதில்லை.

He advised her against doing it.
அவர் அதைச் செய்ய வேண்டாம் என அவளுக்கு அறிவுறுத்தினார்.

It is time for me to get my eyes checked.
நான் எனது கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

Would you come here a moment?
நீங்கள் ஒரு கணம் இங்கு வருவீர்களா?

We have to change our plan.
நாங்கள் எங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

Do we have to change our plan?
நாங்கள் எங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளதா?

We don't have to change our plan?
நாங்கள் எங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியதில்லை.

Don't we have to change our plan?
நாங்கள் எங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியதில்லையா?
She came back home a while ago.
அவள் சிறிது நேரத்திற்கு முன்பு வீடு திரும்பினாள்.

Come with us.
எங்களோடு வாருங்கள்.

Where are we?
நாம் எங்கு இருக்கிறோம்?

It is necessary to answer that question.
அந்த கேள்விக்கு பதிலளிப்பது அவசியமானது.

Is it necessary to answer that question?
அந்த கேள்விக்கு பதிலளிப்பது அவசியமானதா?

It is not necessary to answer that question.
அந்த கேள்விக்கு பதிலளிப்பது அவசியமானதல்ல.

Isn't it necessary to answer that question?
அந்த கேள்விக்கு பதிலளிப்பது அவசியமானதல்லவா?

He told me that he was sad.
அவர் சோகமாக இருப்பதாக என்னிடம் கூறினார்.

Did he tell you that he was sad?
அவர் சோகமாக இருப்பதாக உங்களிடம் கூறினாரா?

He didn't tell me that he was sad.
அவர் சோகமாக இருப்பதாக என்னிடம் கூறவில்லை.

Didn't he tell you that he was sad?
அவர் சோகமாக இருப்பதாக உங்களிடம் கூறவில்லையா?
Previous Post Next Post