ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 153


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


In five seconds.
ஐந்து செக்கன்களில்.

In thirty minutes.
முப்பது நிமிடங்களில்.

In one hour.
ஒரு மணி நேரத்தில்.

In two weeks.
இரண்டு வாரங்களில்.

In three months.
மூன்று மாதங்களில்.

In five years. 
ஐந்து ஆண்டுகளில்.

I ate dinner.
நான் இரவு உணவு சாப்பிட்டேன்.

Did you eat dinner?
நீங்கள் இரவு உணவு சாப்பிட்டீர்களா?

I didn't eat dinner.
நான் இரவு உணவு சாப்பிடவில்லை.

Didn't you eat dinner?
நீங்கள் இரவு உணவு சாப்பிடவில்லையா?

He writes books.
அவர் புத்தகங்கள் எழுதுகிறார்.

Does he write books?
அவர் புத்தகங்கள் எழுதுகிறாரா?

He doesn't write books.
அவர் புத்தகங்கள் எழுதுவதில்லை.

Doesn't he write books?
அவர் புத்தகங்கள் எழுதுவதில்லையா?


You can fix this.
உங்களால் இதை சரிசெய்ய முடியும்.

Can you fix this?
உங்களால் இதை சரிசெய்ய முடியுமா?

You can't fix this.
உங்களால் இதை சரிசெய்ய முடியாது.

Can't you fix this?
உங்களால் இதை சரிசெய்ய முடியாதா?

Why can't you fix this?
ஏன் உங்களால் இதை சரிசெய்ய முடியாது?

We accept cash.
நாங்கள் பணம் ஏற்றுக்கொள்கிறோம்.

Do you accept cash?
நீங்கள் பணம் ஏற்றுக்கொள்கிறீர்களா?

We don't accept cash.
நாங்கள் பணம் ஏற்றுக்கொள்வதில்லை.

Don't you accept cash?
நீங்கள் பணம் ஏற்றுக்கொள்வதில்லையா?

They should send it to us.
அவர்கள் அதை எங்களுக்கு அனுப்ப வேண்டும்.

Should they send it to us?
அவர்கள் அதை எங்களுக்கு அனுப்ப வேண்டுமா?

They shouldn't send it to us.
அவர்கள் அதை எங்களுக்கு அனுப்பக்கூடாது.

Shouldn't they send it to us?
அவர்கள் அதை எங்களுக்கு அனுப்பக்கூடாதா?
Previous Post Next Post