ஆங்கிலத்தில் பேசுவோம் | Learn English through Tamil | பகுதி 155


'ஆங்கிலத்தில் பேசுவோம்' (Learn English through Tamil) எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Let it happen.
அதை நடக்க விடுங்கள்.

Don't let it happen.
அதை நடக்க விடாதீர்கள்.

It shouldn't happen.
அது நடக்கக்கூடாது.

I can't let it happen to you.
என்னால் அதை உங்களுக்கு நடக்க விட முடியாது.

You shouldn't let it happen to him.
நீங்கள் அதை அவருக்கு நடக்க விடக்கூடாது.

Let him go.
அவனை போகவிடுங்கள்.

Don't let him go.
அவனை போகவிடாதீர்கள்.

Don't let him go alone.
அவனை தனியே போகவிடாதீர்கள்.

I can't let him go.
என்னால் அவனை போகவிட முடியாது.


We can protect them.
எங்களால் அவர்களை பாதுகாக்க முடியும்.

We should protect them.
நாங்கள் அவர்களை பாதுகாக்க வேண்டும்.

Can we protect them?
எங்களால் அவர்களை பாதுகாக்க முடியுமா?

Should we protect them?
நாங்கள் அவர்களை பாதுகாக்க வேண்டுமா?

We can't protect them.
எங்களால் அவர்களை பாதுகாக்க முடியாது.

We shouldn't protect them.
நாங்கள் அவர்களை பாதுகாக்கக் கூடாது.

Can't we protect them?
எங்களால் அவர்களை பாதுகாக்க முடியாதா?

Shouldn't we protect them?
நாங்கள் அவர்களை பாதுகாக்கக் கூடாதா?

They created the problem.
அவர்கள் பிரச்சனையை உருவாக்கினார்கள்.

Did they create the problem?
அவர்கள் பிரச்சனையை உருவாக்கினார்களா?

They didn't create the problem.
அவர்கள் பிரச்சனையை உருவாக்கவில்லை.

Didn't they create the problem?
அவர்கள் பிரச்சனையை உருவாக்கவில்லையா?
Previous Post Next Post