ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 157


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

சிலருக்கு ஆங்கிலத்தில் எழுத, வாசிக்க முடியுமெனினும், ஆங்கிலத்தில் கதைப்பது சற்று சிரமமாக இருக்கும். அவ்வாறானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி? அல்லது Steps to Speak English Fluently எனும் பகுதியை பார்வையிடுங்கள். அங்கே தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் காலப்போக்கில் உங்களாலும் இலகுவாக ஆங்கிலத்தில் கதைக்க முடிவதை உணர்வீர்கள்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I am well.
நான் நலம்.

I am not well.
எனக்கு சுகமில்லை.

I am not feeling well.
என் உடல்நிலை சரியில்லை.

I am feeling tired.
நான் களைப்பாக உணர்கிறேன்.

Are you not feeling well?
உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா?

What happened to you?
உங்களுக்கு என்ன நடந்தது?

I am behind you.
நான் உங்களுக்குப் பின்னால் இருக்கிறேன்.

Are you behind me?
நீங்கள் என் பின்னால் இருக்கிறீர்களா?

I am not behind you.
நான் உங்களுக்குப் பின்னால் இல்லை.

Aren't you behind me?
நீங்கள் என் பின்னால் இல்லையா?

This is a new way.
இது ஒரு புதிய வழி.

Is this a new way?
இது ஒரு புதிய வழியா?

This is not a new way.
இது ஒரு புதிய வழியல்ல.

Isn't this a new way?
இது ஒரு புதிய வழியல்லவா?


He is addicted to drugs.
அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளார்.

Is he addicted to drugs?
அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளாரா?

He is not addicted to drugs.
அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகியில்லை.

Isn't he addicted to drugs?
அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகியில்லையா?

That is the solution.
அதுதான் தீர்வு.

Is that the solution?
அதுதான் தீர்வா?

That is not the solution.
அது தீர்வல்ல.

Isn't that the solution?
அது தீர்வல்லவா?

I should eat now.
நான் இப்போது சாப்பிட வேண்டும்.

Should I eat now?
நான் இப்போது சாப்பிட வேண்டுமா?

I shouldn't eat now.
நான் இப்போது சாப்பிடக் கூடாது.

Shouldn't I eat now?
நான் இப்போது சாப்பிடக் கூடாதா?
Previous Post Next Post