ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 158


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Apart from that
அதைத் தவிர

Except them
அவர்களைத் தவிர

Including him
அவர் உட்பட

Excluding him
அவரைத் தவிர்த்து

Without you
நீங்கள் இல்லாமல்

Besides them
அவர்களைத் தவிர

Lack of resources
வளங்களின் பற்றாக்குறை

Outside the house
வீட்டிற்கு வெளியே

He suffers.
அவர் அவதிப்படுகிறார்.

Does he suffer?
அவர் அவதிப்படுகிறாரா?

Why does he suffer?
ஏன் அவர் அவதிப்படுகிறார்?

He doesn't suffer.
அவர் அவதிப்படுவதில்லை.

Doesn't he suffer?
அவர் அவதிப்படுவதில்லையா?

He gave us his money.
அவர் அவரது பணத்தை எங்களுக்குத் தந்தார்.

Did he give us his money?
அவர் அவரது பணத்தை எங்களுக்குத் தந்தாரா?

He didn't give us his money.
அவர் அவரது பணத்தை எங்களுக்குத் தரவில்லை.

Didn't he give us his money?
அவர் அவரது பணத்தை எங்களுக்குத் தரவில்லையா?


They belong to our community.
அவர்கள் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

Do they belong to your community?
அவர்கள் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களா?

They do not belong to our community.
அவர்கள் நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

Don't they belong to your community?
அவர்கள் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா?

She should know the consequences.
அவள் பின்விளைவுகளை அறிந்துகொள்ள வேண்டும்.

Should she know the consequences?
அவள் பின்விளைவுகளை அறிந்துகொள்ள வேண்டுமா?

She shouldn't know the consequences.
அவள் பின்விளைவுகளை அறிந்துகொள்ளக் கூடாது.

Shouldn't she know the consequences?
அவள் பின்விளைவுகளை அறிந்துகொள்ளக் கூடாதா?

I was compelled to do so.
நான் அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன்.

Were you compelled to do so?
நீங்கள் அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டீர்களா?

I was not compelled to do so.
நான் அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தப்படவில்லை.

Weren't you compelled to do so?
நீங்கள் அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தப்படவில்லையா?
Previous Post Next Post