சுர்ஜித்தை நினைவூட்டும் ரயன்!


கடந்த 5 நாட்களாக மொரோக்கோ நாட்டின் பாப் பெர்ரட் எனும் ஊருக்கு அருகாமையில் உள்ள 32 மீட்டர் ஆழ் கிணற்றின் விழுந்து தவிக்கும் ரயன் எனும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி அவரை மீட்டெடுக்க மீட்புக்குழுவினர் தொடர்ந்தும் முயற்சிசெய்து வருகின்றனர். தற்போது அவர்களின் முயற்சிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிறுவன் ஆழ் கிணற்றில் விழுந்தது கடந்த செவ்வாய்க்கிழமையாகும். வெள்ளிக்கிழமை காலை மீட்புக் குழு ரயன் உயிருடன் இருப்பதை உறுதி செய்தது. 

கிணறு குறுகலாக இருப்பதாலும், மேலும் மண் சரிந்துவிடுமோ என்ற அச்சத்தாலும் கிணற்றின் துளை வழியாக மீட்புப் பணியாளர்கள் கீழே இறங்கிச் செல்லாமல், புதன்கிழமை காலை முதல் இரவு பகலாக முயற்சித்து 150 மீட்டர் நீளத்துக்கும், 32 மீட்டர் ஆழத்துக்கும் சரிவைத் தோண்டி குழந்தையை மீட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் மீட்புப் பணியாளர்கள். 


இச்சம்பவமானது 2019 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இதே போன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து பிறகு உயிரிழந்து முழு உலகையும் சோகத்தில் ஆழ்த்திய சுர்ஜித் வில்சன் எனும் குழந்தையின் சோகக் கதையை நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.
Previous Post Next Post