Lesson 11 | Tenses - காலங்கள்

ஆங்கில இலக்கணத்தின் அடிப்படையாக Tenses (காலங்கள்) எனும் பகுதி கருதப்படுகிறது. இவற்றை வைத்தே ஆங்கிலத்தில் கதைக்க மற்றும் எழுத முடிகிறது. எந்தவொரு ஆங்கில வாக்கியமும் பெரும்பாலும் Tenses களில் உள்ள எதாவது ஒரு பகுதியில் அடங்கிவிடும். 


நீங்கள் Tenses - காலங்கள் எனும் பகுதியை முழுமையாக கற்றுவிட்டால், நீங்கள் சுமார் 75% ஆன ஆங்கில இலக்கணத்தை கற்றுவிட்டீர்கள் என்றே கூற வேண்டும். மேலும் இவற்றை வைத்து உங்களால் ஆங்கிலத்தில் இலகுவாக எழுத மற்றும் உரையாட முடியும்.


ஆங்கிலத்தில் Tenses அடிப்படையில் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

1. Simple Tense.
2. Continuous Tense.
3. Perfect Tense.
4. Perfect Continues Tense.


இந்த 4 பகுதிகளும்,
  • நிகழ்காலம் (Present).
  • இறந்தகாலம் (Past).
  • எதிர்காலம் (Future) 
ஆகிய மூன்று காலங்களையும் வைத்து மேலும் மூன்று பகுதிகளாக தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.

அவையாவன,

1. Simple Tense.
  1. Present Simple Tense.
  2. Past Simple Tense.
  3. Future Simple Tense.

2. Continuous Tense.
  1. Present Continuous Tense.
  2. Past Continuous Tense.
  3. Future Continuous Tense.

3. Perfect Tense.
  1. Present Perfect Tense.
  2. Past Perfect Tense.
  3. Future Perfect Tense.

4. Perfect Continues Tense.
  1. Present Perfect Continuous Tense.
  2. Past Perfect Continuous Tense.
  3. Future Perfect Continuous Tense.
என்பவையாகும். ஆகவே இங்கே நீங்கள் கற்கவேண்டிய 12 பகுதிகள் உள்ளன. இவற்றை தனித்தனியே ஒவ்வொரு பாடங்களாக தொடர்ந்துவரும் பகுதிகளில் பார்ப்போம். 

ஆங்கில இலக்கணத்தில் Tenses எனும் இந்தப் பகுதியை இலகுவாகக் கற்றுக்கொள்ள முடியும். இதனை சரியாக கற்று விளங்கிக்கொண்டால், உங்கள் வாழ்வில் ஆங்கிலம் காரணமாக தடைப்பட்டிருக்கும் பல விடயங்களை இலகுவாக சாதித்துவிட முடியும். ஆங்கிலம் காரணமாக மூடப்பட்டிருக்கும் பல கதவுகளும் உங்களுக்காகத் திறந்துகொள்ளும்.
Previous Post Next Post