ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 172


ஆங்கிலத்தில் கருத்துத் தெரிவிக்கும் முறைகள் (Expressing Opinions in English) 

ஆங்கிலத்தில் உங்கள் கருத்தைத் தெரிவிக்க உதவும் சில ஆங்கில வாக்கியங்களையும் அவற்றின் தமிழ் கருத்தையும் இங்கே பார்க்கலாம்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இதனை PDF வடிவிலும் உங்களால் தரவிறக்கிக்கொள்ள முடியும்.


As far as I know…
எனக்குத் தெரிந்தவரையில்…

Personally speaking…
தனிப்பட்ட முறையில் பேசினால்…

Personally, I think…
தனிப்பட்ட முறையில், நான் நினைக்கிறேன்…

The point is that…
விஷயம் என்னவென்றால்…

I feel…
நான் உணர்கிறேன்…

I would say…
நான் சொல்வேன்…

To be honest…
நேர்மையாக / உண்மையாக…

I’m sure…
நான் உறுதியாக நம்புகிறேன்…

Honestly I think…
உண்மையாக நான் நினைக்கிறேன் ...
(இங்கே Honestly என்பது நேர்மையாக என்பதை விட தமிழில் உண்மையாக என்றே பொருந்தும்)

It is thought that…
என்று கருதப்படுகிறது…

According to scientists…
விஞ்ஞானிகளைப் பொருத்தவரையில்…

My point of view is that…
என்னுடைய பார்வை என்னவென்றால்…

Well, if you ask me…
சரி, என்னைக் கேட்டால்...

I am certain…
நான் உறுதியாக இருக்கிறேன்...

I’m absolutely convinced…
நான் முற்றிலும் நம்புகிறேன்…

I am not certain, but…
எனக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனால்…

I tend to think…
நான் நினைக்க முனைகிறேன்…

Some people say that…
என்று சிலர் சொல்கிறார்கள்...

The essential point is…
முக்கிய விஷயம் என்னவென்றால்…

I would suggest…
எனது பரிந்துரைப்பேன்…

It seems to me…
எனக்குத் தோன்றுகிறது…

As for me…
என்னைப் பொறுத்தவரை…

As far as I’m concerned…
என்னைப் பொறுத்தவரையில்…

If I am not mistaken…
என்னைத் தவறாகக் கருதவில்லை என்றால்...

I believe…
நான் நம்புகிறேன்…


Everybody knows…
எல்லோருக்கும் தெரியும்…

In my opinion…
எனது கருத்துப்படி…

I have heard…
நான் கேட்டிருக்கிறேன்…

In my view…
எனது பார்வையில்…

It seems like…
போல் தெரிகிறது…

Apparently…
வெளிப்படையாக...

The way I see it is…
நான் அதைப் பார்க்கும் விதத்தில்...

I agree…
நான் ஏற்றுக்கொள்கிறேன்...

It seems obvious…
வெளிப்படையாகத் தெரிகிறது…

From my perspective…
எனது கண்ணோட்டத்தில்…

From my point of view…
எனது பார்வையில்…

Yes, but don’t you think…?
ஆம், ஆனால் நீங்கள் நினைப்பதில்லையா...

I strongly believe that…
என்று நான் உறுதியாக நம்புகிறேன்...

I am not sure/certain, but…
எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால்…

I am of the opinion that …
என்ற கருத்தில் நான் இருக்கிறேன்...

My conviction is that…
என்னுடைய நம்பிக்கை என்னவென்றால்…

I really feel…
நான் உண்மையாக உணர்கிறேன்…

I suppose…
நான் நினைக்கிறேன்…

What I mean is…
நான் சொல்லவருவது என்னவென்றால்…

I guess…
நான் யூகிக்கிறேன்...

Many people believe…
பலர் நம்புகிறார்கள்…

I have no doubt…
எனக்கு எந்த சந்தேகமும் இல்லை…

I might be wrong but…
நான் பிழையாக இருக்கலாம், ஆனால்...

If you ask me…
நீங்கள் என்னைக் கேட்டால்…

இது போன்று ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்களுக்கு உதவும் நோக்கில் பல பதிவுகள் எமது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றையும் கற்று உங்கள் ஆங்கில அறிவை விருத்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Previous Post Next Post