ஆங்கிலத்தில் குழப்பமான சொற்கள் | Confusing Pairs of Words in English | பகுதி 03


ஆங்கிலத்தில் குழப்பமான சொற்கள் (Confusing Pairs of Words in English) எனும் இப்பகுதியூடாக ஆங்கிலத்தில் சில வேளைகளில் ஒரே உச்சரிப்பையும் ஒரே மாதிரியான ஒலியையும் எழுப்பும் அல்லது வாசிக்கும் போது தவறாகப் புரியப்படும், ஆனால் வித்தியாசமான கருத்தைக் கொண்டிருக்கும் சில சொற்கள் பற்றிப் பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் எழுத, வாசிக்க மற்றும் கதைக்க இவ்வாறான சொற்கள் பற்றித் தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.


Accept - ஏற்றுக்கொள்
Except - தவிர

I accept your opinion.
நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

All my friends came today, except you.
உங்களைத் தவிர எனது எல்லா நண்பர்களும் இன்று வந்தார்கள்.

She didn't accept my gift.
அவள் எனது பரிசை ஏற்றுக்கொள்ளவில்லை.

He passed all the subjects, except Science.
விஞ்ஞானத்தை தவிர மற்ற எல்லா படங்களிலும் அவன் சித்தியடைந்தான். 


Than - விட
Then - பிறகு

He is better than earlier. 
அவன் முன்பை விட நன்றாக இருக்கிறான்.

I came first, then he came.
நான் முதலில் வந்தேன், பிறகு அவன் வந்தான்.

My house is smaller than yours.
எனது வீடு உங்கள் வீட்டை விட சிறியது.

You eat first, then we will eat.
நீங்கள் முதலில் சாப்பிடுங்கள், பிறகு நங்கள் சாப்பிடுவோம்.


Angle - கோணம்
Angel - தேவதை

Draw an angle.
ஒரு கோணத்தை வரையுங்கள்.

She looks like an angel.
அவள் பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் இருக்கிறாள்.
Previous Post Next Post