ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 169


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

You can come here.
உங்களால் இங்கே வர முடியும்.
Can you come here?
உங்களால் இங்கே வர முடியுமா?
You can't come here.
உங்களால் இங்கே வர முடியாது.
Can't you come here?
உங்களால் இங்கே வர முடியாதா?

He should play.
அவன் விளையாட வேண்டும்.
Should he play?
அவன் விளையாட வேண்டுமா?
He shouldn't play.
அவன் விளையாடக் கூடாது.
Shouldn't he play?
அவன் விளையாடக் கூடாதா?

They went home.
அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள்.
Did they go home?
அவர்கள் வீட்டுக்குச் சென்றார்களா?
They didn't go home.
அவர்கள் வீட்டுக்குச் செல்லவில்லை.
Didn't they go home?
அவர்கள் வீட்டுக்குச் செல்லவில்லையா?

She will finish her work.
அவள் அவளுடைய வேலையை முடிப்பாள்.
Will she finish her work?
அவள் அவளுடைய வேலையை முடிப்பாளா?
She won't finish her work.
அவள் அவளுடைய வேலையை முடிக்க மாட்டாள்.
Won't she finish her work?
அவள் அவளுடைய வேலையை முடிக்க மாட்டாளா?

This is your house.
இது உங்களுடைய வீடு.
Is this your house?
இது உங்களுடைய வீடா?
This is not your house.
இது உங்களுடைய வீடல்ல.
Isn't this your house?
இது உங்களுடைய வீடல்லவா?
Previous Post Next Post