ஆங்கிலத்தில் குழப்பமான சொற்கள் | Confusing Pairs of Words in English | பகுதி 04


ஆங்கிலத்தில் குழப்பமான சொற்கள் (Confusing Pairs of Words in English) எனும் இப்பகுதியூடாக ஆங்கிலத்தில் சில வேளைகளில் ஒரே உச்சரிப்பையும் ஒரே மாதிரியான ஒலியையும் எழுப்பும் அல்லது வாசிக்கும் போது தவறாகப் புரியப்படும், ஆனால் வித்தியாசமான கருத்தைக் கொண்டிருக்கும் சில சொற்கள் பற்றிப் பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் எழுத, வாசிக்க மற்றும் கதைக்க இவ்வாறான சொற்கள் பற்றித் தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இது போன்று ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்களுக்கு உதவும் நோக்கில் பல பதிவுகள் எமது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றையும் கற்று உங்கள் ஆங்கில அறிவை விருத்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



இதே போன்று 'ஆங்கிலத்தில் குழப்பமான சொற்கள்' பற்றிய இதற்கு முன்னைய பதிவுகளையும் பார்வையிடுங்கள்.

Access - அணுகல்
Excess - அதிகப்படியான

I have internet access .
எனக்கு இணைய அணுகல் உள்ளது.

He has access to my email.
அவரிடம் எனது மின்னஞ்சலூக்கான அணுகல் உள்ளது.

Excess glucose in urine.
சிறுநீரில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ்.

Excess demand.
அதிகப்படியான கேள்வி / தேவை.


Incident - சம்பவம்
Accident - விபத்து

I couldn't forget that incident.
என்னால் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.

That incident happened in the morning.
அந்த சம்பவம் காலையில் நடந்தது.

Road accident.
வீதி விபத்து.

Train accident.
தொடருந்து விபத்து.


Disease - நோய்
Decease - மரணம்

Kidney disease.
சிறுநீரக நோய்.

Skin disease.
தோல் நோய்.

Deceased person.
மரணித்த நபர்.

Deceased was a 25-year-old male.
மரணித்தவர் 25 வயதுடைய ஒரு ஆண்.


Bare - வெற்று / வெறும்
Bear - தாங்கு / கரடி

Don't walk barefooted
வெறுங்காலுடன் நடக்க வேண்டாம்.

He returned barehanded.
அவர் வெறுங்கையுடன் திரும்பினார்.

She can't bear this pain.
அவளால் இந்த வலியை தாங்க முடியாது.

Polar bear.
பனிக்கரடி / துருவக் கரடி.
أحدث أقدم