ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 170


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

You are right.
நீங்கள் சரி.
Am I right?
நான் சரிதானே?
You are wrong.
நீங்கள் தவறு.
Am I wrong?
நான் தவறா?

It is hard to work today.
இன்று வேலை செய்வது கடினம்.
Is it hard to work today?
இன்று வேலை செய்வது கடினமா?
It is not hard to work.
இன்று வேலை செய்வது கடினமல்ல.
Isn't it hard to work?
இன்று வேலை செய்வது கடினமல்லவா?

You told me.
நீங்கள் என்னிடம் சொன்னீர்கள்.
Did you tell me?
நீங்கள் என்னிடம் சொன்னீர்களா?
You didn't tell me.
நீங்கள் என்னிடம் சொல்லவில்லை.
Didn't you tell me?
நீங்கள் என்னிடம் சொல்லவில்லையா?

He can see us.
அவனால் நம்மை பார்க்க முடியும்.
Can he see us?
அவனால் நம்மை பார்க்க முடியுமா?
He can't see us.
அவனால் நம்மை பார்க்க முடியாது.
Can't he see us?
அவனால் நம்மை பார்க்க முடியாதா?
أحدث أقدم