ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 171


ஆங்கிலத்தில் உதவி கேட்பது எப்படி?  (How to ask for help in English?) 

ஆங்கிலத்தில் உதவி கேட்க பயன்படும் சில ஆங்கில வாக்கியங்களையும் அவற்றின் தமிழ் கருத்தையும் இங்கே பார்க்கலாம்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இதனை PDF வடிவிலும் உங்களால் தரவிறக்கிக்கொள்ள முடியும்.
Can you help me?
உங்களால் எனக்கு உதவ முடியுமா?

Help me, please!
தயவுசெய்து எனக்கு உதவுங்கள்!

I need some assistance.
எனக்கு கொஞ்சம் உதவி தேவை.

I need some help.
எனக்கு கொஞ்சம் உதவி தேவை.

Give me a hand!
எனக்கு ஒரு கை கொடுங்கள்!

Could you give me a hand?
உங்களால் எனக்கு ஒரு கை கொடுக்க முடியுமா?

Could you lend me a hand?
உங்களால் எனக்கு ஒரு கை கொடுக்க முடியுமா?

I need your help.
எனக்கு உங்கள் உதவி தேவை.

I need your support.
எனக்கு உங்கள் ஆதரவு தேவை.

I need your assistance.
எனக்கு உங்கள் உதவி தேவை.

I need a helping hand.
எனக்கு ஒரு உதவிக் கரம் தேவை.

Can someone help me?
யாராவது எனக்கு உதவ முடியுமா?

Give me a hand to do this.
இதைச் செய்ய எனக்கு ஒரு கை கொடுங்கள்.

Would you mind helping me?
எனக்கு உதவுவதில் நீங்கள் ஏதும் நினைப்பீர்களா?

I can't do this without your help.
உங்கள் உதவி இல்லாமல் என்னால் இதை செய்ய முடியாது.
Previous Post Next Post