குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்து வந்த குரங்கை சுட்டு வீழ்த்திய போலீசார்!


மெக்ஸிகோவில் ஆயுதமேந்திய ஒரு குழுவுக்கும் போலீசாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் பட்டியலில் குண்டு துளைக்காத ஜாக்கெட் போட்டு வந்த ஒரு குரங்கும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் குரங்கு spider monkey எனும் குரங்கு வகையை சேர்ந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

போலீசாருக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்திய கும்பலில் இருந்த 20 வயதுடைய ஒரு நபரால் இந்தக் குரங்கு பயிற்சியளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிக்கப்படுகிறது. அவர்கள் வந்த வாகனங்களில் இருந்து சில ஆயுதங்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post