ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 175


ஆங்கிலத்தில் கோபத்தை வெளிப்படுத்தும் முறைகள்  (Expressing Anger in English) 

ஆங்கிலத்தில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தப் பயன்படும் சில ஆங்கில வாக்கியங்களையும் அவற்றின் தமிழ் கருத்தையும் இங்கே பார்க்கலாம்..

இதனை PDF வடிவிலும் உங்களால் தரவிறக்கிக்கொள்ள முடியும்.
Get lost!
தொலைந்து போ!

Rubbish!
குப்பை!

Shame on you!
உன் மேல் அவமானம்!

Mind your own business!
உன் வேலைய பார்த்துக்கொள்!

It's none of your business!
அது ஒன்றும் உன் வேலையல்ல.
(அதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை)

You better mind only your business!
நீ உன் வேலைய மட்டும் பார்ப்பது நல்லது.

Get out of my way!
என் வழியில் இருந்து விலகிச் செல்!

Don't cross my way!
என் வழியில் குறுக்கிடாதே!

Don't cross the limits!
வரம்பு மீறாதே!

I don't believe it!
நான் அதை நம்புவதில்லை!

I can't stand it any longer!
என்னால் இனியும் பொறுக்க முடியாது!

I'm so mad right now!
நான் இப்போது மிகவும் கோபமாக இருக்கிறேன்!

I don't think that's very clever!
அது பெரிய கெட்டித்தனம் என்று நான் நினைக்கவில்லை!

Enough is enough!
போதுமென்றால் போதும்!

That's the last straw!
அது தான் கடைசி!

I don't talk to him!
நான் அவனுடன் கதைப்பதில்லை.

I can't talk to you!
என்னால் உன்னுடன் பேச முடியாது!

I don't like it!
எனக்கு அது பிடிக்கவில்லை!

I don't want it!
எனக்கு அது வேண்டாம்!
Previous Post Next Post