ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 174


ஆங்கிலத்தில் உங்களை அறிமுகம் செய்வது எப்படி?  (How to introduce yourself in English?) 

ஆங்கிலத்தில் உங்கள் கருத்தைத் தெரிவிக்க உதவும் சில ஆங்கில வாக்கியங்களையும் அவற்றின் தமிழ் கருத்தையும் இங்கே பார்க்கலாம்.

இதனை PDF வடிவிலும் உங்களால் தரவிறக்கிக்கொள்ள முடியும்.


Hi, my name is Sufana.
ஹாய், எனது பெயர் சுபானா.

I come from India.
நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்.

I live in Ontario.
நான் ஒண்டாரியோவில் வசிக்கிறேன்.

I am 26 years old.
எனக்கு வயது 26.

There are five people in my family.
எனது குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர்.

I work as a Manager.
நான் ஒரு முகாமையாளராக பணிபுரிகிறேன்.

My hobbies are watching movies and riding bicycle.
எனது பொழுதுபோக்கு சைக்கிள் மிதிப்பதும், திரைப்படம் பார்ப்பதும் ஆகும்.

I enjoy playing tennis.
நான் டென்னிஸ் விளையாடுவதை அதிகம் விரும்புகிறேன். 

I don't like swimming.
எனக்கு நீச்சல் பிடிக்காது.

My favourite food is chocolate.
எனக்கு பிடித்த உணவு சாக்லேட்.
Previous Post Next Post