ஆங்கிலத்தில் பேசுவோம் | Spoken English | பகுதி 176


இங்கே I'm எனும் வார்த்தையுடன் கதைக்க முடியுமான 50 ஆங்கில வாக்கியங்கள் பற்றிப் பார்க்கலாம். 

உண்மையில் I'm என்பது I AM எனும் இரு சொற்களையும் சுருக்கி எழுதும் முறையாகும். பொதுவாக நீங்கள் செய்யும் ஒரு விடயத்தை அல்லது உங்கள் நிலை, சூழ்நிலை போன்றவற்றை விவரிக்க I'm எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

அவ்வாறான 50 ஆங்கில வாக்கியங்களின் உதாரணங்களை இங்கே பார்க்கலாம். இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.

I'm happy.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

I'm sad.
நான் சோகமாக இருக்கிறேன்.

I'm confused.
நான் குழப்பத்தில் இருக்கிறேன்.

I'm hungry.
எனக்கு பசிக்கிறது.

I'm good.
நான் நன்றாக இருக்கிறேன்.

I'm lucky.
நான் அதிர்ஷ்டசாலி.

I'm thirsty.
எனக்கு தாகமாக இருக்கிறது.

I'm upset.
நான் மன வருத்தத்தில் இருக்கிறேன்.

I'm very happy.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

I'm so tired.
எனக்கு மிகவும் களைப்பாக இருக்குறது.

I'm so thirsty.
எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது.

I'm not happy.
நான் சந்தோஷமாக இல்லை.

I'm not sad.
நான் சோகமாக இல்லை.

I'm not confused.
நான் குழப்பத்தில் இல்லை.

I'm not hungry.
எனக்கு பசியில்லை.

I'm not thirsty.
எனக்கு தாகம் இல்லை.

I'm not upset.
நான் மன வருத்தத்தில் இல்லை.

I'm not feeling well.
நான் நன்றாக இல்லை.
(எனக்கு சுகமில்லை)

I'm from Canada.
நான் கனடாவில் இருந்து வருகிறேன்.

I'm from India.
நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்.

I'm from Sri Lanka.
நான் இலங்கையில் இருந்து வருகிறேன்.

I'm doing good.
நான் நன்றாக இருக்கிறேன்.

I'm working.
நான் வேலை செய்துகொண்டு இருக்கிறேன்.

I'm travelling.
நான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.

I'm coming.
நான் வந்துகொண்டு இருக்கிறேன்.

I'm watching.
நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

I'm walking.
நான் நடந்துகொண்டு இருக்கிறேன்.

I'm running.
நான் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

I'm driving.
நான் (வாகனம்) ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.

I'm your friend.
நான் உன்னுடைய நண்பன்.

I'm your son.
நான் உங்கள் மகன்.

I'm your brother.
நான் உன்னுடைய சகோதரன்.

I'm his friend.
நான் அவனுடைய நண்பன்.

I'm his son.
நான் அவருடைய மகன்

I'm his brother.
நான் அவனுடைய சகோதரன்.

I'm her friend.
நான் அவளுடைய நண்பன்.

I'm not your friend.
நான் உன்னுடைய நண்பன் அல்ல.

I'm not your son.
நான் உங்கள் மகன் அல்ல.

I'm not your brother.
நான் உன்னுடைய சகோதரன் அல்ல.

I'm not his friend.
நான் அவனுடைய நண்பன் அல்ல.

I'm not her friend.
நான் அவளுடைய நண்பன் அல்ல.

I'm not like you.
நான் உன்னைப் போல் இல்லை.

I'm not like him.
நான் அவனைப் போல் இல்லை.

I'm not like your friend.
நான் உன் நண்பன் போல் இல்லை.

I'm here.
நான் இங்கு இருக்கிறேன்.

I'm here for a work.
நான் ஒரு வேலைக்காக வந்திருக்கிறேன்.

I'm there for you.
உனக்கு நான் இருக்கிறேன்.

I'm there for her.
அவளுக்கு நான் இருக்கிறேன்.

I'm there for him.
அவனுக்கு நான் இருக்கிறேன்.

I'm with my friend.
நான் என் நண்பனுடன் இருக்கிறேன்.

I'm with my dad.
நான் என் அப்பாவுடன் இருக்கிறேன்.

I'm with my brother.
நான் என் சகோதரனுடன் இருக்கிறேன்.

I'm with your dad.
நான் உனது அப்பாவுடன் இருக்கிறேன்.

I'm with your brother.
நான் உனது சகோதரனுடன் இருக்கிறேன்.Previous Post Next Post